அமெரிக்காவில் ஆசிய நாட்டு சிறுமி படுகொலையில் சிக்கினார் சித்தி
இந்த நிலையில் ஆஷ்தீப் கவுர், அந்த வீட்டின் குளியல் தொட்டியில் சிராய்ப்பு காயங் களுடன் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிறுமியை அவளது சித்தி அர்ஜூன் சம்தி பர்தாஸ்தான் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இது பற்றி அந்த வீட்டில் வசித்து வந்த பெண் கூறும்போது, “ஆஷ்தீப் குளியல் அறைக்கு சித்தியுடன் சென்றதை நான் பார்த்தேன். சில நிமிடங்களில் சித்தி மட்டும் வெளியே வந்தார். நான் ஆஷ்தீப் குளித்துக்கொண்டிருப்பாள் என நினைத்தேன். அவள் குளியல் அறையில் இருந்து நீண்ட நேரம் வெளியே வராததால் நான் குளியல் அறைக்கு சென்று பார்த்தேன். அங்கே உள்ள தொட்டியில் அவள் பிணமாகக் கிடந்தாள்” என்றார்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியின் உடலைக் கைப்பற்றி பல மணி நேரமான நிலையில், அவளது சித்தி பர்தாஸ் சிக்கவில்லை. பின்னர் அவர் போலீசிடம் சிக்கினார். அவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இதற்கு முன்பும் கூட ஆஷ்தீப்பை அவளது சித்தி பர்தாஸ் கொடுமைப்படுத்தி இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து வந்த இந்த சிறுமி, கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் அங்கு சென்றாள். இப்போது அவள் கொலை செய்யப்பட்டிருப்பது இந்தியாவில் உள்ள விவாகரத்தான அவளது தாய்க்கு மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்துள்ளது.
–