கியூபாவை தாக்கிய ‘இர்மா’ புயல் தற்பொழுது அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைக் தாக்க தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான ‘இர்மா’ புயல், கரீபியன் தீவுகளை சின்னாபின்னப்படுத்தியுள்ளது. பல தீவுகள், முற்றிலுமாய் அழிந்து போய்யுள்ளதாக கூறப்படுகின்றது. மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற நிலைக்கு அவை தள்ளப்பட்டுள்ளதாகவும், அங்கு சுமார் 20 பேர் இந்தப் புயல், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.