முண்டாசுப்பட்டி ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் – அமலாபால் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் ராட்சசன். திரில்லர் கதையில் உருவான இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து, இப்போது தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் ராம்குமார்.
இந்தநிலையில், ராட்சசன் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தெலுங்கு நடிகர் நிதின் நாயகனாக நடிப்பார் என்று கூறப்பட்ட வந்த நிலையில், இப்போது பெல்லம் கொண்ட சீனிவாஸ் நாயகனாக நடிக்கயிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதோடு, இந்த படத்தில் ரகுல் பிரீத்சிங், அமலாபால் நடித்த நாயகி வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தற்போது நாகசைதன்யாவுக்கு ஜோடியாக வெங்கி மாமா என்ற படத்தில் ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.