ஐரோப்பிய கமிஷன் ஆப்பிள் நிறுவனத்திற்கு விதித்துள்ள 13 பில்லியன் யூரோ அபராதத்திற்கு எதிராக சட்டரீதியான போராட்டத்தை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இன்று அந்த உத்தரவை எதிர்த்து ஆப்பிள் சார்பில் சட்டரீதியான ஆட்சேபம் எழுப்பப்பட உள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள் வரிசெலுத்த தவறும் நிலையில் ஐரோப்பிய யூனியன் அவற்றின் மீது சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.ஐபோன் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் லுக்சம்பர்க் நிறுவனத்தில் இன்றுமுதல் இரண்டு நாள் நடைபெறும் நீதிமன்ற விசாரணைக்கு ஆறு பேர் கொண்ட சட்ட நிபுணர் குழுவை அனுப்பி வைத்துள்ளது.