தெலுங்கில் அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்த திரில்லர் படம் பாகமதி. இந்த படத்தை ஜி.அசோக் இயக்கினார். ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷாசரத் ஆகிய மலையாள நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
தற்போது ஹிந்தியில் இப்படம் ரீமேக் ஆகிறது. தெலுங்கில் இயக்கிய ஜி.அசோக்கே ஹிந்தியிலும் இயக்குகிறார். அனுஷ்கா நடித்த வேடத்தில் நடிகை பூமி பெத்னேகர் நடிக்கிறார்.













