அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிய டிப்பர் மற்றும் உழவியந்திர சாரதிகள் இருவருக்கு 45 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தது கிளிநொச்சி மாவட்ட நீதிவான் மன்று.
பளைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிய டிப்பர் மற்றும் உழவியந்திரங்களையும் அதன் சாரதிகளையும் கைது செய்த பளைப் பொலிஸார் நேற்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தினர்.
இரு சாரதிகளும் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணத்தால் டிப்பர் வாகன சாரதிக்கு 25 ஆயிரம் ரூபா தண்டமும் உழவியந்திர சாரதிக்கு 20 ஆயிரம் ரூபா தண்ட மும் விதித்துத் தீர்ப்பளித்தது கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்று.