ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் பூமராங். இந்த படம் வருகிற மார்ச் 1-ந்தேதி வெளியாகிறது. அதர்வாவுடன் மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் டிரெய்லர், ஒரு பாடல் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தற்போது நடிகர் தனுசும் தனது டுவிட்டரில் முகையாழி என்ற பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த பாடலை 5 லட்சத்திற்கும் மேலானவர்கள் பார்த்து லைக் செய்துள்ளனர்.