ரொறொன்ரோவில் இடம்பெறும் வரலாறு- படைக்கும் பிறைட் அணிவகுப்பு
கனடா- ரொறொன்ரோவில் இன்று ஞாயிற்றுகிழமை இடம்பெற உள்ள வருடாந்த பிறைட் அணிவகுப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மக்கள் கூட்டத்தில் கனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோவும் கலந்து கொள்கின்றார்..
பிரதமரின் பங்களிப்பு வரலாறு படைக்கும் ஒரு அம்சமாக அமையும். அணிவகுப்பில் கலந்து கொள்ளும் முதலாவது கனடிய பிரதம மந்திரி இவராவார்.பதவியில் இருக்கும் பிரதம மந்திரி அணிவகுக்கும் முதல் நிகழ்வாக அமைகின்றது.
இந்த அணிவகுப்பில் கலந்து கொள்ளும் மற்றய குறிப்பிடத்தக்க அரசியல் வாதிகள் ஒன்ராறியோவின் முதல்வர் கத்லின் வின் மற்றும் ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி ஆகியவர்களாவர்.
ரொறொன்ரோவில் இந்த பிறைட் கொண்டாட்டங்கள் ஒரு மாதமாக இடம்பெறுகின்றது. ஆனால் இம்மாதம் சோக சம்பவமும் இடம்பெற்றது. யூன் மாத ஆரம்பத்தில் LGBTQ {லெஸ்பியன், கே, ஓரின சேர்க்கை, இருபால் மற்றும் திருநங்கை} மக்கள் 49-பேர்கள் வரை வுளொரிடா இரவு விடுதி ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ரொறொன்ரோவின் இம்மாத கொண்டாட்டங்கள் படுகொலைக்கு இரையானவர்களிற்கு அர்ப்பணம் செய்வதாக அமையும் என கூறப்பட்டுள்ளது.