அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் இன்று(6) காலை 10.00 மணிக்கு திட்டமிட்டபடி அமைதியான முறையில் இடம்பெறுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்ததோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குதல் மற்றும் மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குதல் என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கூட்டு எதிர்க் கட்சியினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கூட்டு எதிர்க் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஹம்பாந்தோட்டைப் பொலிஸார் நீதிமன்றத்தில் நேற்று (05) தடை உத்தரவைப் பெற்றுள்ளது. நீதிமன்ற தடை உத்தரவை மீறி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூட்டு எதிர்க் கட்சி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.