தமிழர்களிற்காக கட்சிகளா? கட்சிகளின் நலனை முன்னிறுத்தி வெற்றிபெறும் தமிழர்களா? திரு.பற்றிக் பிறவுனால் நிரூபிக்கப்படப் போகும் உண்மை!

தமிழர்களிற்காக கட்சிகளா? கட்சிகளின் நலனை முன்னிறுத்தி வெற்றிபெறும் தமிழர்களா? திரு.பற்றிக் பிறவுனால் நிரூபிக்கப்படப் போகும் உண்மை!

ICC_Patrick-Brown1 v

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஸ்காபரோ – ரூச் ரிவர் இடைத்தேர்தல் பல மாயைகளையும் கிளப்பியுள்ளது. லிபரல் கட்சியின் வேட்பாளராக தெரிவாகுவதற்காகவே அதிக போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளார்கள். ராதிகா, பிரகல், கிரி ஆகிய தமிழர்கள் உட்பட ஏழு பேர் கடும் போட்டியில் குதித்துள்ளார்கள்.

இந்தத் தேர்தலில் வெற்றி பெறுபவர் ஆகக் கூடியது 16 மாதங்களே பதவியிலிருக்கப் போகின்றார். அதன் பிறகு மாகாண சபைக்கான பொதுத் தேர்தல் இடம்பெறும். எனவே லிபரல் வசம் இருக்கும் இந்தத் தொகுதியைக் கைப்பற்ற வேண்டிய தேவையை திரு.பற்றிக் பிறவுன் கொண்டுள்ளார். 2018 மாகாணசபைத் இந்தத் தேர்தல் தொகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டு விடும். இப்பொழுது 107 சட்டமண்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒன்ராறியோ இனி 15 மேலதிக தொகுதிககைள உருவாக்கி 122 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.

எனவே இரண்டாகப் பிரிபடப் போகின்ற தொகுதிக்கான இப்போதைய இடைத்தேர்தலில் யார் வெல்கின்றார்கள் என்பது கருத்தல்ல, எந்தக் கட்சி வெல்லப் போகின்றது என்பது தான் மாகாணத்தின் மற்றைய தொகுதிகளிற்கும் யாருடைய பக்கம் மக்களின் ஆதரவு இருக்கின்றது என்ற ஒரு செய்தியை சொல்லப்போகின்றது.

தமிழர்களின் எதிர்காலத்தை 2018ம் ஆண்டு தேர்தலிற்கான அறிகுறியாக இந்த் தொகுதியை திரு. பற்றிக் பிறவுன் அவர்கள் வென்றேயாக வேண்டும் என்ற ஒரு கருத்தை இந்தத் தொகுதியிலுள்ள பல தமிழர்களும் நிறையவே ஊடகவியலாளர்களும் ஆதரிக்கின்றார்கள்.

புதிய கண்சவேட்டிவ் உறுதிமொழியாகவே கனடியத் தமிழர்களிற்குத் தந்துள்ள விடயம் யாதென்றால் 2018த் தேர்தலில் தராதரமுள்ள தகுதியுள்ள தமிழர்களிற்கு என மூன்று வெல்லப்படக் கூடிய தொகுதிகளில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பமும், அரச நிர்வாக அலகு இயக்குனர்சபைகளில் தரமுள்ளவர்களிற்கு நியமனமும் என்ற உறுதி மொழி தாராளமாக வழங்கப்பட்டுவிட்டது,

மேற்படி கட்சி தனது வாக்குறுதியை நிறைவேறும் என்பதற்கான சாத்தியத்தை அந்த கட்சி எழு தமிழர்களை தனது கட்சியின் கட்டமைப்பிற்குள் தகுதியான பதவிகளிற்கு நியமித்ததும் இரண்டு தமிழ் இளைஞர்களை பணிக்கு அமர்த்தியதும் காட்டி நிற்கின்றது.

இந் நிலையில் பன்னெடுங்காலமாக லிபரல் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தொகுதியை வெல்ல வேண்டிய நிலையை திரு.பற்றிக் பிறவுன் அவர்களும் அவரது கட்சியும் அடைந்துள்ளார்கள். திரு.பற்றிக் பிறவுனின் ஆட்சிக் காலத்திலேயே தமிழர்களின் நிலை மேம்படும் என்பது யாருக்குமே தெரிந்த உண்மை.

அதாவது கட்சியில் இவர்களின் பாங்கு தமிழர் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டுமா அல்லது கட்சியின் கொள்கைளின் நலன் சார்ந்து அதற்கான ஆதரவுத் தளமாக இருக்க வேண்டுமென என்ற இடத்தில் ஒரு முரன்பாடு தோற்றம் பெறுகின்றது.

இந்தத் தொகுதியின் இடைத் தேர்தலில் வாக்களிக்கவுள்ளோர் மத்தியில் இடம்பெற்ற கருத்தொண்றில் வாக்காளர்கள் மாற்றத்தை விரும்புகின்றார்கள். இந்தத் தொகுதிக்கு நன்கு பரிட்சயமானவரை நிறுத்தினால் முன்னேற்றவாத கண்சவேட்டிவ் கட்சி வெற்றி பெறும் என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

கடந்த முறைத் தேர்தலில் கூட முன்னேற்றவாத கண்சவேட்டிவ் கட்சி லிபரல், புதிய ஜனநாயகக் கட்சிக்குப் போட்டியைப் கொடுத்து அவர்களது வாக்குவங்கியைக் கவர்ந்திருந்தது. இருந்தபோதும் அக் கட்சியின் அப்போதைய தலைவராக இருந்தவர் 1 லட்சம் அரச வேலைகளைக் குறைப்பேன் என்பது உள்ளிடத் தெரிவித்த முரன்பாடான கருத்துக்கள் மக்களிடையே அந்தக் கட்சி மீதான வெறுப்பை உண்டுப பண்ணியிருந்தன.

இப்போதைய நிலை அப்படியில்லை, திரு. பற்றிக் பிறவுனைத் தெரியாத, அறியாத தமிழர்களே இல்லை. அவரிற்கான கனமான பாத்திரத்தை, கௌரவத்தைத் தமிழர்கள் வெளிக்காட்டி வருகின்றார்கள். இதனை தமிழர்களின் முன்னணி அமைப்புக்களின் தலைவர்கள் கூட பகிரங்கமாக தெரிவித்து வருகின்றார்கள்.

குறிப்பாக தைப் பொங்கலையொட்டி தமிழர்களின் முண்ணனி அமைப்பு வருடாந்தம் ஒரு பிரமாண்ட விழவை நடாத்தும். இந்த வருடம் அது நடைபெற்ற போது பற்றிக் பிறவுன் அவர்கள் இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவில் இருந்த போதும் அவரது ஒளிப்பதிவு செய்யப்பட்ட செய்தியை அந்த அமைப்பு மண்டபத்தில் காணொலியில் காண்பித்தது. இது அந்த விழாவில் கலந்து கொண்ட ஆளும் லிபரல் கட்சிக்கு திரு.பற்றிக் பிறவுன் அவர்கள் மீது தமிழர்கள் வைத்திருக்கும் நன்மதிப்பை எடுத்துக் காட்டியது.

திரு.பற்றிக் பிறவுன் அவர்கள் அண்மையில் வெளிப்படையாக ஒரு விடயத்தை தனது சுயவாக்குமூலமாகத் தெரிவித்திருந்தார். தான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் எவ்வாறு தமிழ் மக்களிற்காகக் குரல் கொடுத்தாரோ அவ்வாறு ஒன்ராறியோ மாகாண எதிர்க்கட்சித் தலைவராகவும் குரல் கொடுப்பேன் எனத் தெரிவித்தார்.

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது தமிழர்கள் பாராளுமன்றத்தை நோக்கி ஓடி வந்தார்கள். நான் தான் தடைகளையெல்லாம் தாண்டி அவர்களைச் சந்தித்த முதல் பாராளுமன்ற உறுப்பினன் என்பதைப் பெருமையாகச் சொன்னார்.

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என்று முதலில் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த கனடியப் பாராளுமன்ற உறுப்பினனும் நானே. ஜெனிவா வரை சென்று ஐக்கியநாடுகளைவையில் தமிழர்களின் அவலங்களிற்கு நீதி தேடினேன். எனது இந்தப் பயணம் ஓயாது. இன்று நாங்கள் மௌனித்து நிற்கின்றோம். யுத்தசூனியப் பிரதேசத்தில் இருந்த மக்கள் மீது செல்வீச்சுக்களை மேற்கொண்டவர்கள் தண்டிக்கப்படும் வரை, இறந்தவர்களிற்கான நீதி கிடைக்கும் வரை நான் ஓய மாட்டேன் என திரு. பற்றிக் பிறவுன் பகிரங்கமாகவே தெரிவித்தார்.

திரு.பற்றிக் பிறவுன் 2009ல் இலங்கை செல்ல முயன்றபோது இலங்கை அரசு அவருக்கு விசா வழங்க மறுத்திருந்திருந்தது. தமிழர்களின் உணர்வுகளை மிகவும் புரிந்தவரான திரு. பற்றிக் பிறவுன் தமிழ் அரசியலாளர்கள் பலரே ஐக்கியநாடுகளவை செல்லாத போதும், கனடியப் பாராளுமன்ற உறுப்பினராகச் சென்று தமிழர்களிற்கான குரலாக செயலாற்றியவர்.

2018ல் தான் முதலமைச்சராகி தனது பயணம் இலங்கையின் கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு மாகாணங்களிற்காக இருக்கும் என்றும் தமிழ்த் தொழிலதிபர்களையும் பத்திரிகையாளர்களையும் தன்னும் கூட்டிச் செல்வேன் என்றும் ஏற்கனவே தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. கனடியத் தேசிய நீரோட்டப் பத்திரிகைகளில் கருத்துப்படி, திரு. பற்றிக் பிறவுனே 2018ல் ஒன்ராறியோ மாகாணத்தில் முதல்வராக வருவார் என்பது கணிப்பாக உள்ளது.

பற்றிக் பிறவுனின் கட்சியுடன் அரசியலில் தொண்டாற்றும் தமிழர்கள் கூட ஒரு கட்டத்தில் தங்களது கொள்கைகளுடன் முரன்படுமளவிற்கான கேள்வியொன்றைத் அதீத தமிழ்ப் பிடிப்புள்ள அல்லது தமிழ்ப் பற்றை தமது வாழ்க்கையாகக் கொண்டுள்ளவர்களின் தரப்பிலிருந்து பெறுகின்றார்கள்.

அதிலொன்று மூன்று கட்சியிலும் தமிழர்கள் போட்டியிட்டால் வெல்லப்போவது தமிழர்களாகவே இருக்க முடியும் என்ற வாதம். இந்த வாதம் நிட்சயமாக தமிழர்கள் நலன் சார்ந்த வகையில் நல்லது என்று கருதினாலும் கட்சிகளின் நலன் சார்ந்த வகையில் எந்தளவிற்கு பயணுள்ளது என்பதைப் பார்த்தால் அது பூச்சியம் என்றே சொல்ல முடியும்.

தகுதியான, அந்தத் தொகுதி நலனில் அக்கறையுள்ள தொகுதி மக்களிற்குப் பரிச்சயமான தமிழர் ஒருவர் தனது கட்சியின் சார்பில் வேட்பாளராக நின்றால் அவரை ஆதரித்தேயாக வேண்டும். அவரது வெற்றிக்காக உழைக்க வேண்டும். மாறாக இவர் போட்டியிட்டால் இவரால் லிபரல் கட்சிக்கான அல்லது புதிய ஜனநாயக் கட்சிக்கான போட்டியில் வெற்றிபெற முடியாது என்பது தெரிந்தும் தமிழர் என்ற காரணத்திற்காக ஒருவரை ஆதரிப்பதா அல்லது அந்தத் தொகுதியை வெல்லக்கூடிய தனது கட்சிசார் நட்சத்திர வேட்பாளரை ஆதரிப்பதா என்பது ஒரு தொண்டனது நேர்மைத்தன்மை சார்ந்த விடயமாகும்.

ஏனென்றால் கட்சியை அதன் கொள்கைகளை விரும்பியே ஒருவர் ஒரு கட்சியின் சார்பாக அரசியலில் ஈடுபட முடியுமே தவிர, தான் தமிழன் என்ற காரணத்திற்காக யாரென்றாலும் ஒரு தமிழர் எந்தக் கட்சியிலிருந்தாவது வெல்லட்டும் என செயலாற்றுவது தவறானதொரு நடைமுறையாகும். நான் விரும்பும், ஆதரிக்கும் கட்சி தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது எந்தவொரு கட்சி உறுப்பினரினதும், தொண்டரினதும் விருப்பாக இருக்கும். குறிப்பாக நான் லிபரல் கட்சியை ஆதரித்தால் எனக்கு லிபரல் கட்சி ஆட்சிபீடம் ஏற வேண்டுமென்பதே நோக்கமாக இருக்குமே தவிர,

மற்றைய கட்சியில் நிற்கின்ற தமிழர் வெல்ல வேண்டுமென்பது எனது நோக்காக இருக்க முடியாது. அப்படி ஒரு நோக்கு இருந்தால் நான் கட்சிக்கும் நேர்மையானவன் அல்ல, எனது இனத்திற்கும் நேர்மையானவன் அல்ல. இரண்டு தரப்பையும் சந்தர்ப்பவாதத்திற்காக ஏமாற்றுபவனாவே இருக்கின்றேன் என்று அர்த்தம். இது நீண்ட கால அரசியலில் நிலைத்து நிற்க உதவாது.

மாறாக ஒரு கட்சியின் கொள்கையின் மீது பிடிப்புக் கொண்டு அந்தக் கட்சிக்காக இரவுபகலாக உழைத்த ஒருவர் அந்தக் கட்சியின் வெற்றிக்கான தெரிவான வேட்பாளர் ஒருவரையே உளமார ஆதரிக்க முடியுமே தவிர, இன்னொரு கட்சியில் வேட்பாளராக நிற்கின்ற தமிழர் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் வெல்வதற்கான சந்தர்ப்பமில்லாத ஒரு வேட்பாளரை கட்சியின் கொள்கையில், திரு. பற்றிக் பிறவுனின் தனிப்பட்ட ஆளுமையின் மீது அக்கறை கொண்டுள்ள தமிழர்கள் ஆதரிக்க மாட்டார்கள். அவர்களிற்கு திரு.பற்றிக் பிறவுனின் கட்சி பல்லினங்களைக் கொண்ட இந்தத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் வென்றேயாகவேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர வேறு எதுவும் இருக்காது.

ஏற்கனவே கடந்த மாகாணசபைத் தேர்தலில் வேட்பாளர்களாக இருந்த திரு.சாண் தயாபரன், திரு.கென் கிருபா போன்றவர்களே கட்சி இந்த இடைத்தேர்தலில் வெல்வதே முக்கியம் என தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என வழிகோலிய போதும் பல புதுமுக தமிழ் நடுத்தர வயதினர் தேர்தல் களத்தில் புகமுகுந்து பின் கட்சியின் வெற்றியே இப்போது முக்கியம் என்ற நிலையை உணர்ந்து போட்டியைத் தவிர்த்திருக்கின்றார்கள். இந்த வரிசையில் திரு.குயின்ரஸ் துரைசிங்கம், திரு. அரி அரியநாயகம் போன்ற பலரையும் குறிப்பிடலாம்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News