சந்தானம் தந்தை மரணம்: நட்சத்திர நண்பர்கள் நேரில் அஞ்சலி
தமிழ் சினிமாவில் கவுண்டமணிக்கு பின்பு கவுண்டர் கொடுக்கும் காமெடியனாக வலம் வருபவர் சந்தானம்.
ரஜினி, விஜய், அஜித் போன்ற மாஸ் ஹீரோக்கள் தொடங்கி ஆர்யா, உதயநிதி போன்ற இளம் நாயகர்கள் வரை பலருடனும் நடித்துள்ளார். தற்போது கதாநாயகன் ஆனாலும் அனைவருடனும் நட்பில் உள்ளார்.
இன்று இவரது தந்தை நீலமேகம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இவரது உடலுக்கு விஷ்ணு விஷால், ஆர்யா, விடிவி கணேஷ், ஸ்ரீநாத், தேனான்டாள் முரளி, உதயநிதி உட்பட சந்தானத்தின் பல நட்சத்திர நண்பர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.