Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கனடா ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய தர்மகர்த்தாவும் பிரதான குருக்களுமாகிய பெரு மதிற்புக்குரிய சிவஸ்ரீ விஜயகுமாரன் பஞ்சாட்சரஐயர் அவர்களுக்கு அதி உயர் விருதான தலைமைத்துவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

April 25, 2016
in News
0

கடந்த 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற இவ்வருட உதயன் சர்வதேச விருதுகள் வழங்கும்விழாவில் award 3
பல வருடங்களாக கனடா ஸ்ரீ வரசித்தி ஆலயத்தினை சிறந்த நிர்வாகத்தில் நடத்திவருபவர். கனடாவில் குறிப்பாக தமிழர்கள் செறிந்துவாழும்   ரொறொண்டோ பெரும்பாகத்தில் முதன் முதலாக ஓர் கணேஷா ஆலயம் இல்லை என்ற குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் நோக்குடன் இந்த ஆலயத்தினை ஆரம்பித்தது மட்டுமல்லாமல் ஆலயத்தில் மிகவும் சிறப்பாக வருடாந்த மகோற்சவ விழாக்களை நடத்தி வருபவர். புலம்பெயர்ந்துவாழும் இந்த கனடா நாட்டிலே முதன் முதலாக இந்துமத குருக்கள் என்ற உயர்ந்த அந்தஸ்தில் தங்களது சமய இந்துமத செயற்பாடுகளை தலைமை தாங்கி ஆற்றிவருவதுடன் பல இந்து குருக்களை உருவாக்குவதில் தொடர்ச்சியாக அயராது உழைத்துவருபவர். கவின் கலை நிகழ்வுகளை அழிந்துவிடாமல் பாதுகாக்கும் நோக்குடன் ஆலயத்திற்கும் கவின் கலை நிகழ்வுகளுக்கும் தொடர்புகள் உண்டு என்பதினை நாங்கள் அறிந்திருந்தும் ஆலயத்தில் பல்வேறுவிதமான கவின் கலை நிகழ்வுகளை தமிழர்களின் கலை கலாச்சாரம் பண்பாடு மற்றும் நாகரிகம் ஆகியவற்றை அழிந்துவிடாமல் பாதுகாக்கும் நோக்குடன் விஷேட திருவிழா காலங்களில் உள்ளூர் கலைனர்களை அழைத்து அவர்களுக்குரிய சிறப்பான கௌரவங்களையும் வழங்கி கலைனர்களின் சிறப்பான அடையாளத்தினை உலகத்திற்கு வெளிக்காட்டிவருபவர். மேலாக கடந்த பத்து ஆண்டுகளாக கனடா ஸ்ரீ வரசித்தி விநாயகர் இந்துக்கல்லூரியை நிறுவி அதன் பிரதம தலைமை அதிபராக கடமையாற்றிவருவதுடன் இன்றைக்கு 300 மாணவர்களை உள்வாங்கிய ஒரு பாடசாலையாக திகழ்ந்துவருவது அவர்களின் தலைமைத்துவத்தினை பறைசாற்றுகின்றது. இந்த கல்லூரியில் தமிழ், சமய, பண்ணிசை, வேதபாராயண போன்ற துறைகளை உருவாக்கி பல மாணவர்களை சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களாக உருவாக்கி வருவதில் தலைமைத்துவ ஆளுமையினை நிருபீத்துவருபவர். விசேடமாக கடந்த பத்து ஆண்டுகளாக பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் திறமைகளை தமிழ் மக்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்குடனும் மாணவர்களின் தேர்ச்சியினை வெளிக்கொணர்ந்து அவர்களுக்குரிய கௌரவ பட்டமளிப்பு விழாவினையும் நடத்தி தலைமைத்துவத்தில் மற்றவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக திகழ்ந்துவருபவர். வரசித்தி ஆலயத்தினை மிகவும் சிறப்பான நிர்வாகத்தில் நடத்தி வருவதோடு இந்து சமயத்தினை அழிந்துவிடாமல் பாதுகாக்கும் நோக்குடன் சமய சொற்பொழிவுகள், பிள்ளைகளுக்கான அறிவுரைகள், மாணவர்களை அரவணைத்து அவர்களின் சிறப்பான ஒழுக்கத்துடன் கூடிய கல்விக்கு தொடர்ச்சியாக சமுதாயத்தில்  தலைமை தாங்கிவருபவர். இவ்வாறாக பல்வேறு செயற் திட்டங்களின் தலைமைத்துவ வித்தகராக திகழ்ந்துவரும் பெரு மதிற்புக்குரிய சிவஸ்ரீ  விஜயகுமாரன் பஞ்சாட்சரஐயர் அவர்களுக்கு அதி உயர் விருதான தலைமைத்துவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது பாராடுதல்களுக்குரியதாகும். சிவஸ்ரீ  விஜயகுமாரன் பஞ்சாட்சரஐயர் அவர்களின் சேவைகள் தொடர்ந்தும் வீறுநடை போட வாழ்த்துவதுடன் அவர்களின் பல்வேறுவிதமான செயல் திட்டங்கள் எவ்வித தடையும் இன்றி நிறைவேறி மாணவ சமுதாயத்திற்கு நன்மை பயர்க்க வேண்டுமெனவும் எல்லாம்வல்ல விநாயகப்பெருமானின் திருவருளும் ஆசியும் அவர்களுக்கு உண்டு எனவும் கூறி வாழ்த்தி வணங்குகின்றேன்.

Previous Post

கனடா ஈழநாடு 23ஆவது வருடாந்த பத்திரிகைத்துறை சார்ந்த விழாவினை மிகவும் விமர்சையாக இன்று கொண்டாடினார்கள். மண்டபம் நிறைந்த சங்கீத ரசிகர்களின் கூட்டம்.

Next Post

இசையை வளர்க்க வேண்டும் என்ற துடிப்புடன் “இசை எம்பயர்”

Next Post

இசையை வளர்க்க வேண்டும் என்ற துடிப்புடன் “இசை எம்பயர்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

புனித பேதுருவானவர் அணியை பிரமிக்கவைத்து அபார வெற்றியீட்டியது மருதானை ஸாஹிரா

புனித பேதுருவானவர் அணியை பிரமிக்கவைத்து அபார வெற்றியீட்டியது மருதானை ஸாஹிரா

June 11, 2026
ஆலயங்கள் பொதுமக்களுக்கான சேவைகளையும் செய்ய வேண்டும் ; கலாநிதி ஆறுதிருமுருகன்

ஆலயங்கள் பொதுமக்களுக்கான சேவைகளையும் செய்ய வேண்டும் ; கலாநிதி ஆறுதிருமுருகன்

June 11, 2026
ஏன் ஈழப் போராளிகளை வைத்து திரைப்படம் எடுக்குறீர்கள்? மனோவிடம் கிருபா பிள்ளை கேள்வி

ஏன் ஈழப் போராளிகளை வைத்து திரைப்படம் எடுக்குறீர்கள்? மனோவிடம் கிருபா பிள்ளை கேள்வி

June 10, 2026
இலங்கை – அமெரிக்கா இடையே ஜனநாயக ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வை வலுப்படுத்தும் விசேட சந்திப்பு!

இலங்கை – அமெரிக்கா இடையே ஜனநாயக ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வை வலுப்படுத்தும் விசேட சந்திப்பு!

June 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures