உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு இருந்த கடைசியான தடைகளும் நேற்றுடன் நீக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மூன்று சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டன.
மாநகரசபைகள் திருத்தச்சட்டம், நகர சபைகள் திருத்தச்சட்டம், பிரதேசசபைகள் திருத்தச்சட்டம் ஆகியனவே நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
திருத்தங்களுடன் இவை வாக்கெடுப்புக்கு விடப்படாமலேயே நிறைவேற்றப்பட்டன.
இந்த திருத்தச்சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு நேற்றுக் கூட்டப்பட்டது.
சுமார் ஒரு மணிநேரம் நடந்த விவாதங்களை அடுத்து, மூன்று திருத்தச்சட்டங்களும் நிறைவேற்றப்பட்டன.
உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு இருந்த தடைகள் அனைத்தும், இந்த திருத்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதை அடுத்து நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.