Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இராணுவம் கொத்தணி குண்டுகளை பயன்படுத்தியிருந்தாலும் தவறில்லை என்கிறார் பரணகம

July 5, 2016
in News, Politics
0
இராணுவம் கொத்தணி குண்டுகளை பயன்படுத்தியிருந்தாலும் தவறில்லை என்கிறார் பரணகம

இராணுவம் கொத்தணி குண்டுகளை பயன்படுத்தியிருந்தாலும் தவறில்லை என்கிறார் பரணகம

யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினர் கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்துவதற்கான தேவை ஏற்பட்டிருந்தால், இராணுவத் தேவையின் படி அதற்கான அவசியம் ஏற்பட்டிருந்தால் அந்த நேரத்தில் அது சட்டவிரோதமானதாக அமைந்திருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறேன் என்று காணாமல்போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த போது கொத்தணிக் குண்டு பயன்பாட்டுத்தடை அமுலில் இருக்கவில்லை என்பதை பரணகம ஆணைக்குழுவின் இரண்டாவது ஆணையின் பிரகாரம் வெளிப்படுத்தியுள்ளோம் என்பதை வலியுறுத்துகிறோம்.

2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியே இந்த கொத்தணிக் குண்டு பயன்பாட்டுத் தடை உலகில் அமுலுக்கு வந்தது எனவும் மக்ஸ்வெல் பரணகம குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்பாக வெளியிட்டுள்ள வாய்மூல அறிக்கையில் 33வது பந்தியானது யுத்தத்தின் இறுதி சமயத்தில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் சுயாதீனமான பக்கச் சார்பற்ற விசாரணை நடத்தப்படவேண்டுமென்று ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்களில் எவ்விதமான புதிய தன்மையும் இல்லை என்று இங்கு கூறவேண்டும்.

எமது காணாமல் போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட இரண்டாவது ஆணையின் பிரகாரம் நாம் மேற்கொண்ட விசாரணையில் இலங்கை இராணுவம் கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்தியமைக்கான எவ்விதமான நம்பகரமான ஆதாரங்களும் இல்லை என்பதை கண்டுபிடித்தது.

தருஷ்மன் அறிக்கையிலும் இவ்வாறு கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அதற்கான மூலங்கள் முன்வைக்கப்படவில்லை.

யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் முடிவடைந்த பின்னர் ஐக்கிய நாடுகளின் கண்ணிவெடி அகற்றும் நிகழ்ச்சிப் பிரிவின் உறுப்பினர் ஒருவர் கசிய விட்ட மின்னஞ்சலின் பிரகாரம் மோதல் வலயத்தில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுள்ளது.

ஆனால் இலங்கை இராணுவம் அந்தக்குற்றச்சாட்டை மறுத்ததுடன் அந்த மறுப்பானது அந்தநேரம் ஐ.நா.வினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை எமது ஆணைக்குழு அவதானித்திருந்தது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணயைாளரின் அறிக்கையை யாராவது வாசிக்கும் போது கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்துவதானது யுத்தக் குற்றம் என்று நினைக்கலாம்.ஆனால் காணாமல்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் தலைவர் என்ற வகையில் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டுகின்றேன்.

அதாவது கொத்தணி ஆயுத சாசனத்தின் பிரகாரம் இந்த ஆயுதப் பயன்பாடு இலங்கையில் யுத்தம் நடைபெற்ற போது உலகில் தடைசெய்யப்பட்டிருக்கவில்லை. மாறாக 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியே இந்த தடை உலகில் செயற்பாட்டுக்கு வந்தது.

எனவே யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினர் கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்துவதற்கான தேவை ஏற்பட்டிருந்தால் இராணுவத் தேவையின் படி அதற்கான அவசியம் ஏற்பட்டிருந்தால் அந்த நேரத்தில் அது சட்டவிரோதமானதல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.

ஜெனிவா செயற்பாட்டில் கொத்தணிக் குண்டுகள் விவகாரம் பாரிய பிரசித்தத்தைப் பெற்றுள்ளது. ஆனால் இலங்கையில் யுத்தம் முடிவடைந்த போது கொத்தணிக் குண்டு பயன்பாட்டுத் தடை அமுலில் இருக்கவில்லை என்பது பரணகம ஆணைக்குழுவின் இரண்டாவது ஆணையின் பிரகாரம் வெளிப்படுத்தியுள்ளோம் என்பதை வலியுறுத்துகிறோம்.

Tags: Featured
Previous Post

உடுப்பிட்டியில் ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு!

Next Post

விமான விபத்து ; சிதைவடைந்த நிலையில் சடலங்கள் மீட்பு

Next Post
விமான விபத்து ; சிதைவடைந்த நிலையில் சடலங்கள் மீட்பு

விமான விபத்து ; சிதைவடைந்த நிலையில் சடலங்கள் மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

2028 ரி20 மகளிர் உலகக் கிண்ணத்தில் விளையாட இலங்கை தகுதி

June 27, 2026
முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு ஏம்பல் குளத்து நீரில் மூழ்கும் தட்டாமலை – ஒட்டுசுட்டானை இணைக்கும் வீதி ; சீரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

June 27, 2026
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்

12 மில்லியனுக்கும் அதிகமானோர் ‘ரின்’ இலக்கங்களை பெற்றுள்ளனர் ; 5 மில்லியன் பேர் காத்திருப்பதாக பிரதி அமைச்சர் நிஷாந்த தெரிவிப்பு

June 27, 2026
ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

ஆயிரம் தொல்பொருள் தளங்களை பாதுகாப்பதற்கு விசேட திட்டம்

June 27, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures