Multiple sclerosis நோய்க்கெதிராக புதுவகை சிகிச்சை
புதுவகையான சிகிச்சையொன்று நோயாளிகளில் Multiple sclerosis நோய்த்தாக்கத்தை குணப்படுத்துவது இனங்காணப்பட்டுள்ளது.
கனடாவில் 24 மனிதர்களில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், குறித்த நோய்த்தாக்கத்திற்குட்பட்டு, சக்கர நாற்காலியில் முடங்கிக் கிடந்த நபர் ஒருவர் சாதாரண நிலைக்கு திரும்பியமை அவதானிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் மேற்படி சிகிச்சையானது மிக பயங்கரமானது, அது ஒருவரின் மரணத்திற்கும் வழிவகுத்துள்ளது.
ஆகையால், ஆய்வுக் குழு இது தொடர்பில் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
Multiple sclerosis நோயானது நீண்ட காலமாக ஏற்படக்குடிய நோயாகும்.
இது மூளை மற்றும் முன்னான் நரம்புறையில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
மங்கலான பார்வை, மற்றும் கடுமையான சோர்வு போன்றன இந் நோய்த்தாக்கத்தின் அறிகுறிகளாகும்.