Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் இராணுவ ஆட்சி இல்லை என்று மறுக்கிறது அரசு

May 13, 2020
in News, Politics, World
0

இராணுவத் தளபதிகளை ஜனாதிபதியாக்குவதற்கு முயற்சித்து இரண்டு தடவைகளும் தோல்வி கண்டவர்களே இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சியை நோக்கிப் பயணிக்கின்றார் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் என அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

முன்னாள், இந்நாள் இராணுவ அதிகாரிகளுக்கு அரச கட்டமைப்பில் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சுகாதார அமைச்சின் செயலாளர் பதவிக்குக் கூட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நாடு இராணுவ மயமாக்கலை நோக்கிப் பயணிப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றனவே என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இப்படியான கருத்துகளை சமூகவலைத்தளங்களில் உருவாக்கும் நபர்கள் யார்? இராணுவத் தளபதியாக இருந்தவர்களை ஜனாதிபதியாக்குவதற்கு முயற்சித்து, இரண்டு தடவைகளும் தோல்வி கண்டவர்களே இதன் பின்னணியில் செயற்படுகின்றனர். சரத் பொன்சேகா, மகேஷ் சேனாநாயக்க ஆகிய இருவரையுமே ஜனாதிபதியாக்குவதற்கு முயற்சி எடுக்கப்பட்டது.

சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் விசேட மருத்துவ நிபுணராவார். குறிப்பாக நியமனம் வழங்கும்போது அவர் இராணுவமா, எந்த இனத்தை, மதத்தைச் சார்ந்தவர் என்று அல்லாமல், தகுதி அடிப்படையிலேயே வழங்கப்படவேண்டும். அதனையே ஜனாதிபதி செய்து வருகின்றார். இராணுவ மருத்துவ அணியில் இருந்த திறமையான – தகுதியுடைய மருத்துவ அதிகாரியே இவர். எனவே, அவரின் தகமையில் எவ்வித குறைபாடுகளும் இல்லை. அது இராணுவ மயமாக்கல் செயற்பாடும் கிடையாது.

கடந்த ஆட்சியின்போது 6 நாடுகளுக்குத் தூதுவர்களாக இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். இப்படி செய்தவர்களே குறுகிய அரசியல் நோக்கில் தற்போது விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

நாட்டுக்குப் புதியதொரு வழியைக் காட்டவே ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச வந்துள்ளார். அவர் ஒரு இராணுவ அதிகாரி. அவர் போன்ற தலைவர் தற்போதைய சூழ்நிலையில் இல்லாது இருந்திருந்தால் நாட்டுக்கு என்ன நடந்திருக்கும்?

அமெரிக்க வரலாற்றில் இதுவரை 44 பேர் ஜனாதிபதிகளாகப் பதவி வகித்துள்ளனர். இவர்களில் 26 பேர் இராணுவத்தில் இருந்தவர்கள்” – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

22 படை அதிகாரிகள் சிவில் சேவைக்குள் நியமனம்

Next Post

சர்வாதிகார இராணுவ ஆட்சிக்கு தேர்தலில் முடிவு கட்டுவர் மக்கள்

Next Post

சர்வாதிகார இராணுவ ஆட்சிக்கு தேர்தலில் முடிவு கட்டுவர் மக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures