Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முல்லைத்தீவு பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை!

April 4, 2020
in News, Politics, World
0

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றுமுன் தினம் (02) முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் குறித்த இளைஞரது வீட்டுக்கு அயல் வீட்டில் இருந்து சென்ற நாய் ஒன்று அவர்களுடைய வீட்டில் இருந்த பொருட்களை திருடிச் சென்ற நிலையில் குறித்த நாயை அந்த வீட்டில் வசித்த இளைஞன் கட்டி வைத்துள்ளார்.

இந்நிலையில் அயல் வீட்டவர்களும் நாயின் உரிமையாளர்களும் சென்று குறித்த இளைஞருடன் வாக்குவாதப்பட்ட நிலையில் வாக்குவாதம் முற்றிய அது கைகலப்பாக மாறி குறித்த இளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த இளைஞன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு (03) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் குமுழமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரான இராசலிங்கம் ரமேஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

இளைஞன் உயிரிழந்ததை தொடர்ந்து இன்று (4) குறித்த பகுதியில் உள்ள 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

இரட்டை குழந்தைகளுக்கு கொரோன, கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்

Next Post

அடுத்தகட்ட நிவாரணத்தை வழங்குவதாக அறிவித்தார் ஜனாதிபதி!!

Next Post

அடுத்தகட்ட நிவாரணத்தை வழங்குவதாக அறிவித்தார் ஜனாதிபதி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures