Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே விநியோகிப்பதற்கான நடவடிக்கை

March 28, 2020
in News, Politics, World
0

மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே விநியோகிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிராம மட்டத்திலுள்ள மக்களின் தேவைகளை அறிந்துகொள்வதற்காக, கிராமம் ஒன்றுக்கு 5 அதிகாரிகளை ஈடுபடுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அதிகாரிகள், இடர் முகாமைத்துவ அதிகாரிகள், விவசாய அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகள் ஆகியோர் இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மக்களின் தேவைகளைக் குறித்த அதிகாரிகள் கண்டறிந்த பின்னர், அத்தியாவசியப் பொருட்களை உரிய விலையில், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஊடாக வழங்கப்படல் வேண்டும் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்வதற்காக தனியாரின் லொறிகளைப் பயன்படுத்துவதற்கான அதிகாரம் பிரதேச செயலாளர்களுக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், குறித்த பகுதிகளிலுள்ள லொறிகள் தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தவிர, லொறிகளை வழங்குவதற்கு விருப்பமுடைய லொறி உரிமையாளர்கள் இருப்பின், பெயர் விபரங்களை பிரதேச செயலாளர்களுக்கு வழங்குமாறும் பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், மக்களுக்குத் தேவையான மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிப்பதற்கு நாளை (28) முதல் தபால் ஊழியர்களை ஈடுபடுத்தவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தமது பிரிவுகளிலுள்ள மக்களுக்குத் தேவையான மருந்துகளை, வீடுகளுக்கே விநியோகிக்குமாறு அனைத்து மருந்தகங்களின் உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய மக்கள் சேவையை முறையாக நடத்திச் செல்வதற்காக நிறுவப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணி பணிகளை ஆரம்பித்துள்ளது.

வழிநடத்தல் செயற்பாடுகள் முன்னாள் பொருளாதார அமைச்சர் பஸில் ராஜபக்சவின் தலைமையில் இடம்பெறுகின்றன.

Previous Post

வைக்கோல் பட்டறைக்கு விஷமிகள் தீ வைப்பு !

Next Post

அடுத்த வாரம் தொடக்கம் யாழ்.பல்கலையில் கொரோனா பரிசோதனை

Next Post

அடுத்த வாரம் தொடக்கம் யாழ்.பல்கலையில் கொரோனா பரிசோதனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures