Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோட்டாவைச் சாடுகின்றார் மங்கள

March 28, 2020
in News, Politics, World
0

“உலகின் ஏனைய நாடுகள் குற்றமிழைத்த இராணுவத்தினருக்கு தண்டனை வழங்கி இராணுவத்தினரின் நன்மதிப்பைப் பாதுகாக்கும். ஆனால், இலங்கையில் எண்மரைப் படுகொலை செய்த மரணதண்டனைக் கைதிக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்படுகின்றது. இதுவே இலங்கையின் இன்றைய நிலை.”

– இவ்வாறு கடுமையாகச் சாடியுள்ளார் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர.

யாழ்.மிருசுவில் படுகொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விசேட படைப்பிரிவின் ஸ்டாப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார்.

இது குறித்து மங்கள சமரவீர அவரது ருவிட்டர் பக்கத்தில் இன்று பின்வருமாறு பதிவிட்டிருக்கின்றார்

“உலகின் ஏனைய நாடுகள் இராணுவத்துக்கு அவமதிப்பையும், இழிவையும் ஏற்படுத்திய குற்றவாளிகளைத் தண்டிப்பதன் ஊடாக தமது இராணுவத்தினரின் நன்மதிப்பைப் பாதுகாக்கின்றன. ஆனால், இப்போது ஒரு சிறுவனையும் இன்னும் எழுவரையும் படுகொலை செய்தமைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்படுகின்றது. இதுவே இலங்கையின் இன்றைய நிலை” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

வடக்கு மக்களுக்கு சங்கக்கார, மஹேல 1.6 மில்லியன் நிதியுதவி

Next Post

மரக்கறிகளுக்கு உயர்ந்த மொத்த விலை நிர்ணயம்

Next Post

மரக்கறிகளுக்கு உயர்ந்த மொத்த விலை நிர்ணயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures