Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு மக்களுக்கு சங்கக்கார, மஹேல 1.6 மில்லியன் நிதியுதவி

March 28, 2020
in News, Politics, World
0

வடக்கு மாகாண மக்களுக்காக இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன உள்ளிட்ட குழுவினர் 1.6 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார இந்த நிதியுதவித் தொகையை வழங்கி வைத்துள்ளார்.

பத்தரமுல்லையிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் உப காரியாலத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, “எமது நாடு போன்று உலகமே பாதிக்கப்பட்டுள்ள இந்தக் கொரோனா வைரஸினால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். எனவே நான், மஹேல ஜயவர்தன, சாலிய ஒஸ்ட்டின், நாதன் சிவகாமநாதன் மற்றும் எமது நண்பர்கள் சிலர் இணைந்து ஏதேனுமொரு உதவியைச் செய்ய முடியுமாக இருந்தால், அதனைப் பெரும் பாக்கியமாகக் கருதினோம். நாட்டு மக்களுக்கு அநேகமானவர்கள் உதவி செய்கின்றனர். இந்தப் போராட்டத்துக்குக் கரம் கொடுக்கின்றனர். அயலவர்களின் நலன் தொடர்பிலும் கவனம் செலுத்துகின்றனர். இதனைத் தொடர்ந்தும் முன்னெடுங்கள். அதேபோன்று, ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள்” – என்று ஊடகவியலாளர்களிடம் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

Previous Post

ஊரடங்கை மீறுவோருக்கு பொலிஸ் பிணை இல்லை!

Next Post

கோட்டாவைச் சாடுகின்றார் மங்கள

Next Post

கோட்டாவைச் சாடுகின்றார் மங்கள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures