Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐக்கிய தேசிய கட்சியை ஒன்றிணைப்பதற்கு தொடர்ந்தும் முயற்சி – ராஜித!

March 13, 2020
in News, Politics, World
0
ஐக்கிய தேசிய கட்சியை ஒன்றிணைப்பதற்கு தொடர்ந்தும் முயற்சி – ராஜித!

ஐக்கிய தேசிய கட்சியை ஒன்றிணைப்பதற்கு தொடர்ந்தும் முயற்சித்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நாட்டு மக்கள் கட்சி, நிறம், சின்னம் என்று பாராது சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்துடன், இணைந்து செயற்படினும் அவர்களுக்கு இடையிலும் பல முரண்பாடுகள் இருக்கின்றன.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த தரப்பினருக்கு பௌத்த மதகுருமார், துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட பலரின் ஆதரவு காணப்பட்டது.

தற்போதைய நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு அவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான சக்தியாக மாறத் தயாராகவுள்ளனர்.

வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது. இந்த அரசாங்கத்தினால் தேர்தல் மேடைகளில் நாட்டுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை.

அதற்கு புறம்பாக மாறுபட்ட கோணத்திலேயே இந்த அரசாங்கம் பயணிக்கின்றது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

கொரோனா வைரஸ் காரணமாக பொதுத்தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கம் இல்லை

Next Post

கொரோனா பரவலடையலாம் – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் எச்சரிக்கை

Next Post
கொரோனா பரவலடையலாம் – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் எச்சரிக்கை

கொரோனா பரவலடையலாம் - அரசாங்க மருத்துவ அதிகாரிகள் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures