Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா பரவலடையலாம் – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் எச்சரிக்கை

March 13, 2020
in News, Politics, World
0
கொரோனா பரவலடையலாம் – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் எச்சரிக்கை
இலங்கை பிரஜை இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,இந்த வைரஸ் தொற்று பரவலடைவதற்கான  சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுவதாக அரசாங்க மருத்துவ  அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
ஆகவே ,அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ளவேண்டும் எனவும் அந்த சங்கம்  கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித  அளுத்கேயின் கையொப்பத்துடன் இன்று வெளியிடப்பட்டிருந்த  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,
உலகசுகாதரஸ்தாபனம்  கொரோனா (கொவிட்  -19 )  வைரசினை  உலகளாவிய ரீதியில் பரவலடையும் வைரஸ்  என்று  அறிவித்துள்ளது.. இதுவரையில்  , 114  நாடுகளை  சேர்ந்த  ஒரு இலட்சத்திற்கும்  அதிகமானோர்  இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக  அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், நான்காயிரம்  பேர் மரணித்துள்ளதுடன்,மரணிப்பவர்களின் வீதம் நாளாந்தம்  அதிகரித்தவண்ணமே உள்ளது.
இந்த கொரோனா வைரஸ் முதலில்  பரவலடைந்த சீனாவின் வூஹான் மாநிலம்  தொடக்கம் ஏனைய  மாகாணங்களிலும் , தற்போது வைரஸ் பரவல்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  இருப்பினும் , இத்தாலி மற்றும் ஈரான்  , தென்கொரியா , ஆகிய  நாடுகளில்  கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியுள்ளது.
இதற்கமைய இலங்கை தொடர்பிலும் அதிக அவதானம் செலுத்த வேண்டும். இலங்கையில் கொரோனா வைரஸ்  தொற்றுக்குள்ளாகிய  இலங்கை பிரஜையொருவர் அடையாளம்  காணப்பட்டுள்ளார்.இந்நிலையில் , நோய்த்தொற்று  பரவலடைவதற்கான  சாத்தியக்கூறுகள் அதிகம்  காணப்படுகின்றன.
இவ்விடயம்  தொடர்பில் , அரச வைத்திய அதகாரிகள் சங்கம்  தொடர்புடைய அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த செவ்வாக்கிழமை இவ்விடயம்  தொடர்பிலான விசேட கலந்துரையாடலை ஜனாதிபதியுடன் முன்னெடுத்திருந்தோம் .
அந்த சந்திப்பின் போது  ஜனாதிபதியிடம்  தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு  உட்படுத்தப்பட்டவர்களுக்கு அதிக  கவனம் செலுத்தி தொடர்ந்து கண்காணிப்பு நவடிக்கைளை  முன்னெடுத்து செல்ல வேண்டும். நோய்த்தொற்றுக்குள்ளானவர்களை  தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வசதிகளை  அனைத்து வைத்தியசாலைகளுக்கும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான செய்திகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவேண்டும். ஊடக நிறுவன  பிரதானிகளுடனான  விசேட சந்திப்பினை  ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.
அதற்கு மேலதிகமாக ஒருவேளை அவசரகால நிலைமை அறிவிக்கப்படுமாயின் அக்காலகட்டத்திற்கு தேவையான மருந்து மற்றும் சுகாதார வசதிகளை , களஞ்சியப்படுத்தி வைப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும் எனவும்   வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் வருபவர்கள் தொடர்பில் அதீத கவனம் செலுத்தல் மற்றும் நோய்க்காரணிகளை கண்டுபிடிக்கும் இயந்திர வசதிகளை பொதுமக்கள்  இலகுவில் பயன்படுத்தும் வகையில் செயற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தொம்.
நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவால் இருப்பதற்கும் , மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைளை முன்னெடுத்து செல்வதற்கு அரசாங்கம் செயற்படுத்தும் திட்டங்களுக்கு , அரசாங்க  மருத்துவ  சங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளது.
Previous Post

ஐக்கிய தேசிய கட்சியை ஒன்றிணைப்பதற்கு தொடர்ந்தும் முயற்சி – ராஜித!

Next Post

வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் தொடர்ந்தும் குழப்ப நிலை

Next Post

வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் தொடர்ந்தும் குழப்ப நிலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்கு இலங்கையினால் தகுதிபெற முடியும் என ஹர்ஷித்தா சமரவிக்ரம நம்பிக்கை!

June 26, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

June 26, 2026
என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

என் மீதான குற்றச்சாட்டுப் பத்திரத்தை வடக்கு ஆளுநர் வழங்கவில்லை ; நீதி கோரி நீதிமன்றம் செல்வேன் – ஞா.கிசோர் 

June 26, 2026
மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

மிகக் கொடூரமான கடந்த ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் இடம்பெறவில்லை

June 26, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures