Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக இருந்தவர்களே நிதியை திருப்பி அனுப்பியிருப்பார்கள்

February 11, 2020
in News, Politics, World
0

மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக இருந்தவர்களே வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியிருப்பார்கள் என வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விக்னேஸ்வரன் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் திருப்பி அனுப்பிவிட்டார் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் தெரிவித்த கருத்து தொடர்பாக வாரம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் போய் எங்களைக் குறை கூறி தனக்கு நற்பெயர் பெற்றுக்கொள்ள பார்க்கின்றாரா? அவர் உண்மையில் தெரியாமல் கூறினாரா அல்லது தெரிந்தும் எமக்கு மாசு கற்பிக்கக் கூறினாரா என்று தெரியவில்லை.

என்னுடைய 5 வருட பதவிக்காலத்தில் ஒரு சதத்தையேனும் நாம் மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பவில்லை. முதலாவது, 2014ம் வருடத்தில் 12,000 மில்லியன் கேட்டோம். 1,650 மில்லியன் தான் தரப்பட்டது என்று நினைக்கின்றேன். அப்படி இருக்கையில் திருப்பி அனுப்ப காசு எங்கு இருக்கின்றது?

அதன்பின் வந்த வருடங்களில் ஒரு வருடத்தில் மூவாயிரத்து சொச்சம் தருவதாகக் கூறி பகுதி பகுதியாகத் தான் தரப்பட்டது. அதுவும் ஒரு பகுதி அடுத்த வருடத்தில் தரப்பட்டது. அந்தக் காரணத்தினால் எங்கள் செயற்றிட்டங்களும் பாதிக்கப்பட்டன. தாமதம் அடைந்தன.

நாங்கள் பதவியில் இருந்து வந்த பின்னர் சென்ற வருடம் கூட ஒரு பாரிய தொகை மத்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருக்கின்றது. ஆகவே பணத்தை மத்திய அரசாங்கம் எமக்குத்தராமல் இருந்துவிட்டு நாம் திருப்பி அனுப்பினோம் என்று இந்தியாவில் சென்று எமது பிரதமர் கூறுவது விந்தையாக இருக்கின்றது.

இரண்டாவது நாங்கள் உதாரணமாக 12,000 மில்லியன் கேட்டால் எமக்கு சுமார் பத்தில் ஒரு பங்கைத் தந்துவிட்டு மிகுதி அனைத்தையும் மத்திய அமைச்சர்களுக்கு தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் கொடுத்து வந்துள்ளன. அவர்கள் அந்தப் பணம் அனைத்தையும் வடக்கிற்குச் செலவிடுவதாக பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் பிரசித்தப்படுத்துவார்கள்.

ஆனால் நடப்பது என்ன? அவர்களுக்குக் கிடைத்த பணம் அனைத்தையும் வடகிழக்கு மாகாணத்திற்கு அனுப்புகின்றார்களோ என்பது ஒரு புறம் இருக்க அனுப்பப்படும் பணம் எமக்கு அனுப்பப்படுவதில்லை. அரசாங்க அதிபர்களுக்கே அனுப்புகின்றார்கள். அவர்கள் பலர் பணத்தைத் திருப்பி அனுப்புகின்றார்கள் என்று கேள்வி.

ஒருவேளை பணத்தைத் திருப்பி அனுப்புவதால் மத்தியின் கடைக்கண் பார்வை தமக்குக் கிடைக்கும் என்று அவர்கள் அவ்வாறு அனுப்புகின்றார்களோ அல்லது வேறு காரணங்களுக்காகத் திருப்பி அனுப்புகின்றார்களோ என்பது பற்றி அவர்களே எமக்கு அறிவுறுத்த வேண்டும்.

பிரதமர் பிறநாடுகளில் பேசும் போது உண்மையை அறிந்து பேச வேண்டும். உள்நாட்டில் அரசியல் மேடைகளில் பேசுவது போல் பேசக்கூடாது.

மூன்றாவதாக பிரதமருக்கு 1992ம் ஆண்டின் 58ம் இலக்க சட்டம் பற்றித் தெரியுமோ என்று எனக்குத் தெரியவில்லை. அதன்படி 13வது திருத்தச் சட்டத்தில் எமக்கு வழங்கப்பட்ட மிகக் குறைந்த அதிகாரப் பகிர்வில் மத்திய அரசாங்கம் தமக்கென ஒரு அதிகாரப் பகிர்வொன்றை மேற்கொண்டுள்ளது.

அதாவது தந்த அதிகாரத்திலும் பாதிக்குமேல் குறித்த இந்த சட்டத்தின் ஊடாக மத்திய அரசாங்கம் எம்மிடம் இருந்து பறித்துவிட்டது. அரசாங்க அதிபர், மாவட்டச் செயலாளர், கிராம சேவகர் ஆகியோர் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் இருந்தனர். மேற்படி சட்டம் அவர்களை மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக மாற்றிவிட்டது. அவர்கள் தான் பணத்தைத் திருப்பி அனுப்பி வந்துள்ளார்கள் என்று நினைக்கின்றேன்.

அதாவது மத்திய அரசாங்கத்தின் அலுவலர்களே எமக்கு உதவி புரிவதாக காட்டிக் கொண்டு எம் சார்பில் செலவிடவேண்டியிருந்த பணத்தை மத்திய அரசாங்கத்திற்கு திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். அதைப் பிரதமர் அவர்களே பரிசீலித்துப் பார்க்க வேண்டும். அபாண்டமாக எம்மேல் பழி போடுவதை அவர் நிறுத்த வேண்டும்.

அவரின் புரிதலுக்கு ஒன்றைக் கூற விரும்புகின்றேன். 2016ம் ஆண்டில் முழு இலங்கையிலும் இருக்கும் 850க்கும் மேற்பட்ட திணைக்களங்கள், அமைச்சுக்கள் ஆகியவற்றில் சிறந்த நிதி நிர்வாகத்திற்காக எனது முதலமைச்சர் அமைச்சுதான் முதற் பரிசைப் பெற்றது. பிரதமரின் அமைச்சேதேனும் அவ்வாறு எப்பவென்றாலும் பரிசு பெற்றதோ என்பதை அவர்தான் கூற வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ரணில் விடாப்பிடி, சஜித்துடன் கூட்டணிசேர மறுப்பு

Next Post

மன்னார் மனித புதைகுழி தகாத வார்தை பிரயோகம் சட்டத்தரணிகள் வெளிநடப்பு

Next Post

மன்னார் மனித புதைகுழி தகாத வார்தை பிரயோகம் சட்டத்தரணிகள் வெளிநடப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures