Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணில் விடாப்பிடி, சஜித்துடன் கூட்டணிசேர மறுப்பு

February 11, 2020
in News, Politics, World
0
ரணில் விடாப்பிடி, சஜித்துடன் கூட்டணிசேர மறுப்பு
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணி யானை சின்னத்தின் கீழ் போட்டியிடாத பட்சத்தில் அந்த கூட்டணியில் இணையாது தனித்து யானைச் சின்னத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை போட்டியிட வைப்பதென அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
நேற்று கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு சஜித் பிரேமதாஸவின் புதிய அரசியல் கூட்டணிக்கு அங்கீகாரம் வழங்கி அதற்கு ரஞ்சித் மத்துமபண்டார எம் பியை செயலராக நியமிக்க அனுமதியளித்தது.அதேசமயம் வரும் பாராளுமன்ற தேர்தலில் யானை சின்னத்தின் கீழ் தான் இந்த அரசியல் கூட்டணி தேர்தலில் இறங்கவேண்டுமென நேற்றைய செயற்குழுவில் ரணில் தரப்பு வலியுறுத்தியிருந்தது.
ஆனால் புதிய அரசியல் கூட்டணி இதய சின்னத்தில் போட்டியிட ஏலவே உத்தேசித்துள்ளதால் நேற்றைய கூட்டத்தில் எந்த பதிலையும் கூறாது சஜித் தரப்பு வெளியேறியிருந்தது.
அதனையடுத்து கட்சியின் முக்கியமான உறுப்பினர்களுடன் நேற்றிரவு நீண்ட மந்திராலோசனை நடத்திய ரணில் ,வரும் தேர்தலில் யானைச் சின்னத்தில் மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடுமென திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் கூட்டணி அமைத்து வெளியாரின் சின்னத்தில் போட்டியிட இடமளித்தபோதும் இம்முறை கட்சியின் சொந்த சின்னத்தில் போட்டியிடுவதே நல்லதெனவும், புதிய அரசியல் கூட்டணி இதனை விரும்பாத பட்சத்தில் அவர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி சேராதெனவும் ரணில் திட்டவட்டமாக இங்கு தெரிவித்துள்ளார்.
Previous Post

யாழ் பல்கலைக்கழகம் முன்பாக பெண்கள் அமைப்புக்கள் போராட்டம்

Next Post

மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக இருந்தவர்களே நிதியை திருப்பி அனுப்பியிருப்பார்கள்

Next Post

மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக இருந்தவர்களே நிதியை திருப்பி அனுப்பியிருப்பார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures