விஜய், சூர்யா நடித்த ‛பிரெண்ட்ஸ்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. சில ஆண்டுகளுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது மீண்டும் சீமானை வசைப்பாடி உள்ளார்.
சமீபத்தில் தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில், கடவுள் மறுப்பு கொள்கையாளரான சீமான் அங்கு வழிபாடு நடத்தி உள்ளார். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைலரான நிலையில் இதுகுறித்து விஜயலட்சுமி கூறியதாவது:
‛‛தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் சீமான் வழிபாடு நடத்தி உள்ளார். அவருக்கு முதல் மரியாதை வழங்கி உள்ளனர். இதை விட பெரிய அசிங்கம் எதுவும் இல்லை. லிங்க வழிபாடு பற்றி அசிங்கமாக விமர்சித்தவர் சீமான். அது என்ன என்றே தெரியாமல் பெண்கள் அதன் மீது பால் ஊற்றுகிறார்கள் என விமர்சித்தார். வாக்கில் சுத்தம் இருக்கணும். ஈ.வெ.ராவை பற்றி பேசுகிறுகீர்கள் என்றால் அதை பின்பற்ற வேண்டும். கடவுள் இல்லை என்று சொன்ன நீங்கள், திடீரென முருகன் என் பாட்டன் என்கிறீர்கள். அவர் எப்படி உங்களுக்கு பாட்டான் ஆனார். ஈவெராவின் மகன் அல்ல முருகன், சிவபெருமானின் மகன் முருகன். ஏன் இப்படி மெண்டல் மாதிரி உளறுகிறீர்கள்.
என்னை உங்களுக்கு நியாபகம் உள்ளதா. என் பெயர் விஜயலட்சுமி. என்னை யார் என்றே தெரியாது என்றீர்கள். ‛வாழ்த்துக்கள்’ படத்தில் நடிக்க வந்தபோது எங்கள் வீட்டில் இருந்த சிவலிங்கத்தையும், நான் நெற்றியில் இட்ட தீருநீறு பட்டையையும் கிண்டல் செய்தீர்கள். இப்போது நீங்கள் எதற்கு பட்டை அடித்து போனீர்கள். வடிவேலுவை உங்கள் காமெடி செம்ம. சிவன் தான் என் ஆத்மா. அவர் மீது சத்தியம் செய்கிறேன். என்னை நீங்கள் நிறைய துன்படுத்தினீர்கள். எங்கே உங்கள் பையன் மீது சத்தியம் செய்து சொல்லுங்கள், என்னை உங்களுக்கு தெரியாது என்று.
அசிங்கமாக இல்லை உங்களுக்கு.. இதைவிட உங்களுக்கு அசிங்கமான பொழைப்பு இல்லையா. ஈ.வெ.ரா என்று சொன்னால் அவர் பின்னால் தில்லாக நில்லுங்கள். கோயிலுக்கு எதுக்கு போறீங்க. இந்துக்களை ஏமாற்றவா. ஆபாசமான இடத்திற்கு நீங்கள் ஏன் போகிறீர்கள். தஞ்சாவூர் கோயிலில் இருப்பவர்கள், இப்படி ஒரு பாவிக்கு மரியாதை கொடுத்து இருக்கிறீர்களே. சிவபெருமானை பற்றி இவர் பேசிய உங்களுக்கு தெரியாதா. இது அநியாயமாக தெரியவில்லையா.
மதுரை மீனாட்சி கோயிலுக்கு போய் வந்தபோது நீங்கள் என்னை எப்படி துன்படுத்தினீர்கள் தெரியுமா. ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்தவனை, சிவன் முன் வைத்து மரியாதை செலுத்தி உள்ளீர்கள். எத்தனை பெண்களை நீங்கள் அழ வைத்துள்ளீர்கள். எல்லா தலைவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதித்தார்கள் கொரானா வைரஸ் வந்து கஷ்டப்படுகிறார்கள். அடுத்து சீமானை பிரகதீஸ்வரர் கோயிலில் அனுமதித்துள்ளீர்கள் என் நடக்க போகிறதோ? சாமியை மதிப்பவர்கள் மட்டும் தான் கோயிலுக்கு செல்ல வேண்டும். சீமானுக்கு மானம், மரியாதை இல்லை என தைரியமாக சொல்வேன்.
என்னை மன்னித்து விடுங்கள். சிவனை கும்பிட்டேன் என்ற காரணத்திற்காக சீமானால் நான் நிறைய அவமானப்படுத்தப்பட்டேன். இப்போது அவர் கோயிலுக்கு போனது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் தான் இப்படி பேசினேன்.
இவ்வாறு விஜயலட்சுமி பேசி உள்ளார்.

