சின்னத்திரையில் புகழ் பெற்று சினிமாவுக்கு வந்த போஸ் வெங்கட் வில்லன் மற்றும் கேரக்டர் ரோல்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது கன்னிமாடம் என்றொரு படத்தை இயக்கி வருகிறார். கிராமத்தில் இருந்து சென்னைக்கு படிப்பதற்காக வரும் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.
ஹரிசாய் என்பவர் இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகர் ரோபோ சங்கர் முதன்முறையாக ஒரு பாடல் பாடியிருக்கிறார். இப்படத்தில் மூனு காலு வாகனம் என்று ஆட்டோவைப் பற்றிய ஒரு எழுதப்பட்டுள்ள அந்த பாடலை வெளியிட்டுள்ளனர்.
‛‛இதுவரை நடிகராக ஆதரவளித்த ரசிகர்கள், பாடகராகவும் தனக்கு ஆதரவு தர வேண்டும்” என வேண்டுகோள் வைத்துள்ளார் ரோபோ சங்கர்.













