Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பகிடிவதை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் – இராதாகிருஷ்ணன்

February 9, 2020
in News, Politics, World
0

பல்கலைகழக மாணவர்களுக்குள் முன்னெடுக்கப்படும் பகிடிவதை தொடர்பாக அரசாங்கம் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

தலவாக்கலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கருத்தை வெளியிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “பல்கலைகழக மாணவர்கள் என்பவர்கள் இந்த சமூகத்தின் அடுத்த தலைமுறைக்கு எங்களுடைய மக்களை கொண்டுசெல்ல வேண்டியவர்கள். எனவே பல்கலைகழகத்தில் பகடிவதை புரிவது, தேவையற்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்க விடயமாகும். இது தொடர்பாக அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கின்றோம்.

மலையகத்தைப் பொறுத்தளவில் மலையகத்திலிருந்து தெரிவுசெய்யப்படும் மாணவர்களின் தொகையானது மிகவும் குறைவாக இருக்கின்றது. அப்படியும் எங்களுடைய மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

எனவே, அவர்கள் தங்களுடைய பல்கலைகழக வாழ்க்கையை சரியான முறையில் நிறைவுசெய்து வெளியேறுகின்ற போதுதான் இந்த சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்டப்படும்.

குறிப்பாக வைத்தியத்துறை, பொறியியற்துறை, பட்டயக் கணக்காளர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், சமூக சிந்தனையானளர்கள் போன்றவர்களின் வருகை மலையகத்திற்கு மிகவும் இன்றியமையாதது.

அண்மையில் லிந்துலை பகுதியில் ஒரு மாணவன் தற்கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகின்றது. யாழ்.பல்கலைகழகத்தில் மாணவ, மாணவிகள் உயிரிழந்துள்ளார்கள்.

இவர்கள் அனைவரும் தமிழ் மொழி பேசும் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இவர்களில் யார் பாதிக்கப்பட்டாலும் மலையகம், வடக்கு கிழக்கு, சப்ரகமுவ, ஊவா, போன்றவர்களைக் குறிப்பிடலாம்.

மலையகத்தைப் பொறுத்தளவில் பெற்றோர்கள், பிள்ளைகளை பல்லாயிரம் கனவுகளுடன் பல்கலைகழகங்களுக்கு அனுப்பி வைக்கின்றார்கள். அவர்கள் சில நேரங்களில் தங்களுடைய உணவு சுகபோகங்கள் அனைத்தையும் விட்டுக்கொடுத்தே அதனை செய்கின்றார்கள்.

எனவே, எங்களுடைய மாணவர்கள் பல்கலைகழகம் செல்கின்ற போது அவர்கள் முழுமையாக நிறைவு செய்து வந்தால் மாத்திரமே நாங்கள் உரிய பயனைப் பெற்றுக்கொள்ள முடியும். இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என இதன்போது அவர் வலியுறுத்தினார்.

Previous Post

ஐஸ் போதைப் பொருள் மற்றும் கஞ்சா விற்பனையாளர் கைது!

Next Post

நயன்தாரா படத்தில் கவுதம், யாஷிகா

Next Post

நயன்தாரா படத்தில் கவுதம், யாஷிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமலுக்கு எதிரான வழக்கு…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

July 8, 2026
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டி சி ‘ படத்தின் அப்டேட்

July 8, 2026
நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் அருள்நிதி நடித்திருக்கும் ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

July 7, 2026
நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

நியூஸிலாந்து லின்கன் பல்கலைக்கழக அணிக்கு எதிரான வலைபந்தாட்டத்தில் இலங்கைக்கு மீண்டும் தோல்வி

July 7, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures