பேரன் கொலையின் குற்றவாளிகள் யார்?: பொலிஸார் தகவல்

பேரன் கொலையின் குற்றவாளிகள் யார்?: பொலிஸார் தகவல்

கடந்த வருடம் கொல்லப்பட்ட ஐந்து வயதுடைய எனியாஸ் எமிலியோ (Eneas Emilio Perdomo) என்ற சிறுவனுடைய தாத்தா மற்றும் பாட்டி ஆகியோர் மேல் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருட காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் பிரகாரம் இந்த தகவலைப் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

தனது தாத்தா மற்றும் பாட்டி ஆகியோரது தாக்குதலுக்குள்ளாகியிருந்த எனியாஸ் எமிலியோ கடந்த வருடம் யூலை மாதம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்திருந்தான்.மருத்துவ அறிக்கையின் பிரகாரம் சிறுவனது உடலில் வீக்கக் காயங்கள் இருந்ததாக கல்ஹரி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன் மெக்சிகோவில் பிறந்து பின்னர் தனது தாத்தாவுடன் கல்ஹரிக்கு வந்ததாகப் பொலிஸார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சில மாதங்கள் கழிந்து குறித்த சிறுவன் கொல்லப்பட்டிருந்தான்.

குறித்த கொலை தொடர்பில் பல்வேறு துறைசார்ந்த நிபுணர்களின் ஒத்துழைப்புடன் குற்றவாளிளை நிரூபிக்கும் நடவடிக்கை முன்னெடுத்துவருவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியிருந்தனர்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *