கனடிய குடிவரவு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் முறையில் வருட இறுதிக்குள் தீர்வு!

கனடிய குடிவரவு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் முறையில் வருட இறுதிக்குள் தீர்வு!

கனடாவின் குடிவரவு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் முறையில் இவ்வருட இறுதிக்கு முன்பதாக தீர்வு வழங்கப்படுமென குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கலம் தெரிவித்துள்ளார்.

பிரம்டன் நகர பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாட ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தின் பின், நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.லிபரல் அரசினால் கடந்த வருட தேர்தல் பரப்புரையின் போது, முன்வைக்கப்பட்ட மாற்றங்கள் தொடர்பான வாக்குறுதிகள் குறித்தே, இந்த கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தின் அமைச்சர் ஜோன் மக்கலம் நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,2017 ஆம் ஆண்டில் கனடாவில் குடியேற்றப்படவுள்ள புதியகுடிவரவாளர்களின் என்ணிக்கை தொடர்பாகவும், அவர்கள் கனேடிய சமூகத்தின் வெற்றிகரமாக அங்கத்தவர்களாவதற்கு எவ்வாறு உதவலாம் என்பது தொடர்பாகவும், கூட்டத்தில் பங்கேற்றவர்களுடன் கலந்துரையாடினேன்.

கனேடியக் குடிவரவின் வெற்றி குடிவரவு விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்தலிலும், 21ஆம் நூற்றாண்டில் வழங்கப்படும் சேவைகளிலுமே தங்கியுள்ளது.

குடிவரவு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் முறையில் வினைத்திறனை அதிகரிக்க நவீனமயப்படுத்தலை ஏற்படுத்தல் அவசியாமாகிறது. இவ்வருட இறுதிக்கு முன்பதாக இவ்விடயங்களிற்கு தீர்வுகாண அரசு செயலாற்றுகின்றது எனவும் கூறினார்.

மேலும், கனடாவின் குடிவரவுத் திட்டமிடலில், முன்னிலைப்படுத்தப்பட வேண்டிய விடயங்கள் பற்றியும் பங்கேற்றவர்களின் கருத்துக்களை அமைச்சர் கேட்டறிந்துள்ளார்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News