ஐ.எஸ் முக்கிய தலைவர் உயிரிழந்தார்

ஐ.எஸ் முக்கிய தலைவர் உயிரிழந்தார்

கடந்த மார்ச் மாதம் உயிரிழந்ததாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவரான உமர் ஷிஷானி உயிரிழந்துள்ளமையை, ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய Amaq செய்தி நிறுவனம், ஈராக்கின் மோசூல் நகரின் தெற்குப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலின்போது ஷிஷானி உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பென்டகன், வட-கிழக்கு சிரியாவில் அமெரிக்க படையினர் கடந்த மார்ச் மாதம் மேற்கொண்ட வான் தாக்குதலில், படுகாயங்களுக்கு இலக்கான ஷிஷானி உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளது.

ஐ.ஸ் அமைப்புடன் தொடர்புடைய செய்தி நிறுவனம் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களமான பென்டகன் ஆகியவை ஷஷானி உயிரிழந்தமையை உறுதிப்படுத்தியுள்ள போதும், அவர் உயிரிழந்த இடம் தொடர்பில் வேறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளன.

உயிரிழந்த ஷிஷானியின் உண்மையான பெயர் Tarkhan Batirashvil என்றபோதும், உமர் செசன் எனவே பலராலும் அவர் அறியப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *