Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இம்ரான் கான் சீன பிரதமர் லீ சந்திப்பு

April 29, 2019
in News, Politics, World
0

சீனா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று பீஜிங் நகரில் சீனப் பிரதமர் லி கெகியாங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சீனா பாகிஸ்தானில் குவாடார் உள்ளிட்ட துறைமுகங்களின் மேம்பாடு உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைய நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை செய்து வருகிறது.தற்போது கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசுக்கு சீனா மலேசியா ஆகிய சில நாடுகள் குறுகியகால நிதியுதவி செய்ய முன்வந்துள்ளன.

இந்நிலையில் பாக்.பிரதமர் இம்ரான்கான் இரண்டாவது முறையாக சீனா சென்றுள்ளார். தலைநகர் பீஜிங்-கில் நேற் சீனப் பிரதமர் லி கெ கியாங்- சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.சீனா -பாகிஸ்தான் இடையிலான பொருளாதார மண்டலத்தின் கட்டமைப்பு பணிகளை விரைவுப்படுத்தவும் இருநாடுகளுக்கு இடையிலான எரிசக்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொழில்துறை அபிவிருத்தி மற்றும் பாகிஸ்தான் மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவும் சீன அரசு தயாராக இருப்பதாக பிரதமர் லி கெ கியாங் குறிப்பிட்டார்.

Previous Post

16 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி

Next Post

அமெரிக்காவிடம் ரூ.14 கோடி கேட்கிறது வடகொரியா

Next Post

அமெரிக்காவிடம் ரூ.14 கோடி கேட்கிறது வடகொரியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures