Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஊரடங்கு அமுலில் இந்த வேளை 7 பேர் கைது

April 27, 2019
in News, Politics, World
0

ஊரடங்கு அமுலில் இந்த வேளையில் தம்புள்ள பொலிஸ் பிரதேசத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலத்தில் திருகோணமலை நகரத்திலும் இரண்டு பேர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவருக்கு எதிராக திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அடுத்த சந்தேகநபர் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலத்தில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரை கண்டு தப்பிச் செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இருவரும் மேலதிக விசாரணைக்காக திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

Previous Post

பயங்கரவாத அச்சுறுத்தல் குறையவில்லை – பிரதமர் விசேட அறிக்கை

Next Post

அடிப்படைவாதத்துக்கு எதிராக 24 அம்ச பிரகடனம்

Next Post

அடிப்படைவாதத்துக்கு எதிராக 24 அம்ச பிரகடனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures