ஊரடங்கு அமுலில் இந்த வேளையில் தம்புள்ள பொலிஸ் பிரதேசத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலத்தில் திருகோணமலை நகரத்திலும் இரண்டு பேர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவருக்கு எதிராக திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அடுத்த சந்தேகநபர் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலத்தில் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரை கண்டு தப்பிச் செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவரும் மேலதிக விசாரணைக்காக திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

