தான் கட்சியில் எந்தப் பொறுப்புக்காகவும் கருத்து மோதிக் கொண்டவன் அல்லன் எனவும், ஜனாதிபதி வேட்பாளர் பதவியை தனக்குத் தந்தால் மக்களின் வேண்டுகோளின் படி அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றேன் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
நேற்று (20) மல்வத்து அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக உங்களுடைய பெயரும் பேசப்படுகின்றதே என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
பல தேர்தல்கள் இடம்பெற இருப்பதனால் அடுத்த வருடம் நாட்டு மக்களுக்கு மிகவும் சவாலான ஆண்டாக இருக்கும்.
மக்கள் கருத்தொன்று எழுந்து, கட்சி எதிர்காலத்தில் தனக்கு பொறுப்பொன்று வழங்கும் சந்தர்ப்பம் உருவாகினால், நாட்டில் நீதி மற்றும் நியாயத்தை ஏற்படுத்துவதற்காக தான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றேன் எனவும் அவர் மேலும் கூறினார்.

