புத்தாண்டு கால கடந்த பத்து தினங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 81 பேர் உயிரிழந்திருப்பதாக போக்குவரத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த பத்து தினங்களில் 700 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. விபத்துக்களில் 450 பேர் காயமடைந்துள்ளார்கள்.
இதில் படுகாயங்களுக்கு உள்ளானவர்கள் 186 பேர். மது போதையில் வாகனம் செலுத்திய சுமார் ஆயிரம் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 45 சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

