Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மகிந்தவை எதிர்ப்பதே கூட்டமைப்பின் முடிவானது : பரபரப்பாகும் அரசியல் களம்

November 4, 2018
in News, Politics, World
0
மகிந்தவை எதிர்ப்பதே கூட்டமைப்பின் முடிவானது : பரபரப்பாகும் அரசியல் களம்

தலைமை அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட் டுள்ள மகிந்த ராஜ­பக்­சவை எதிர்ப்­பது என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முடி­வெ­டுத்­துள்­ளது. மகிந்த மீதான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை ஆத­ரிப்­பது என்று முடி­வெ­டுத்­த­தன் மூலம் ரணிலை ஆத­ரிப்­ப­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முடி­வெ­டுத்­துள்­ளது. தற்­போ­தைய அர­சி­யல் சூழ்­நி­லை­யில் நடு­நிலை வகிப்­பது என்­பது ‘‘அரா­ஜ­கத்­துக்கு’’ வெற்­றி­யீட்­டு­வ­தற்கு உத­வு­வ­தாக அமைந்­து­வி­டும் என்­றும் கூட்­ட­மைப்­புத் தெரி­வித்­துள்­ளது.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உயர்­மட்­டக் குழுக்­கூட்­டம் கடந்த இரண்டு நாள்­க­ளா­கத் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்­றி­ருந்­தது. நீண்ட கலந்­து­ரை­யா­ட­லின் பின்­னர் மேற்­படி முடிவை எடுத்­துள்­ள­தாக, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நேற்று விடுத்­துள்ள ஊடக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சட்­ட­வி­ரோ­தம்

அந்த அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:
அர­ச­மைப்­பின் பிர­கா­ரம் பத­வி­யி­லி­ருக்­கும் தலைமை அமைச்­ச­ரைப் பதவி நீக்­கம் செய்­வ­தற்­கான அதி­கா­ரம் அரச தலை­வ­ரி­டம் இல்லை. 19ஆம் திருத்­தத்­துக்கு முன்­னர் அரச தலை­வ­ருக்­குக் கொடுக்­கப்­பட்­டி­ருந்த அந்த அதி­கா­ரம், 19ஆம் திருத்­தத்­தின் மூலம் திட்­ட­வட்­ட­மாக நீக்­கப்­பட்­டது. தலைமை அமைச்­சரை நீக்­கு­வ­தா­க­வும், வேறொ­ரு­வரை நிய­மிப்­ப­தா­க­வும் அறி­வித்து அரச தலை­வர் வெளி­யிட்ட அர­சி­தழ்­கள் அர­ச­மைப்­புக்கு முர­ணா­ன­தும் சட்­ட­வி­ரோ­த­மா­ன­வை­யு­மா­கும்.

கூட்­ட­மைப்பு கண்­டிப்பு
இந்த நட­வ­டிக்­கை­க­ளைத் தொடர்ந்து நாடா­ளு­மன்ற அமர்­வு­களை நிறுத்­தி­ய­தாக அரச தலை­வர் விடுத்த அறி­விப்­பை­யும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மக்­க­ளாட்­சிக்கு மாறான செய­லா­க­வும் நாடா­ளு­மன்­றத்­தின் மீயு­யர் தன்­மை­யைப் பாதிக்­கின்ற செய­லா­க­வுமே நோக்­கு­கின்­றது.

Previous Post

அறிக்கையை மாற்றிய சம்பந்தன்

Next Post

கூட்டமைப்பு எம்மை ஆதரிக்காவிட்டாலும் ,தமிழ் மக்களை நாம் ஆதரிப்போம் ;நாமல் ராஜபக்ச

Next Post

கூட்டமைப்பு எம்மை ஆதரிக்காவிட்டாலும் ,தமிழ் மக்களை நாம் ஆதரிப்போம் ;நாமல் ராஜபக்ச

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures