Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

11 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

November 29, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டின் 11 மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று (29) ஞாயிற்றுக்கிழமை  மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் கடும் மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று பிற்பகல் 1.00 மணி முதல் இரவு 11.59 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 11 மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகள்

கொழும்பு, காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவுகளும்.

பயண வழிகாட்டி

பதுளை மாவட்டம்: ஹல்துமுல்ல

கம்பஹா மாவட்டம்: பியகம, களனி, மஹர, வத்தளை மற்றும் வெகே

அம்பாந்தோட்டை மாவட்டம்: அங்குணுகொலபெலஸ்ஸ, பெலியத்த, கட்டுவன, ஓகேவெல, தங்காலை மற்றும் வீரகெட்டிய  

கேகாலை மாவட்டம்: தெஹியோவிட்ட, தெரனியகல, ருவன்வெல்ல மற்றும் யட்டியாந்தோட்டை  

மொனராகலை மாவட்டம்: தனமல்வில

நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ கோரளை மற்றும் நுவரெலியா.

இடியுடன் கூடிய மழையின்போது பலத்த காற்று மற்றும் கனமழை பெய்யக்கூடும் என்பதுடன், திறந்தவெளியில் இருப்பவர்களுக்குப் பலத்த காயங்கள் அல்லது உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், மின்சார மற்றும் இலத்திரனியல் சாதனங்களுக்குச் சேதம் ஏற்படுவதுடன், மின்சாரம், தொலைத்தொடர்பு சேவைகள், வெளிப்புறப் பணிகள், விளையாட்டு, விவசாய நடவடிக்கைகள், பொது நிகழ்வுகள் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றுக்கும் இடையூறுகள் ஏற்படக்கூடும்.

பொதுமக்களுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்

இடியுடன் கூடிய மழை நெருங்கும்போது வெளிப்புற விளையாட்டு, கட்டுமானம், விவசாயம் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தவும் அல்லது ஒத்திவைக்கவும்.

உடனடியாகப் பாதுகாப்பான கட்டிடத்திற்குள் அல்லது மூடப்பட்ட, உறுதியான கூரையைக் கொண்ட வாகனத்திற்குள் செல்லவும்.

கடற்கரைகள், நீச்சல் பகுதிகள், ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளைத் தவிர்க்கவும்.

தனித்து நிற்கும் மரங்கள், கூடாரங்கள் மற்றும் திறந்த கொட்டகைகளுக்கு அருகில் நிற்பதைத் தவிர்க்கவும்.

மின்னல் தாக்கங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மின்சார சாதனங்கள், குழாய் இணைப்புகள் மற்றும் கம்பி வழி மின் அமைப்புகளிலிருந்து விலகியிருக்கவும்.

வெளிப்புற நிகழ்வுகளைப் பாதுகாப்பான உள்ளரங்குகளுக்கு மாற்றவும்.

சிறுவர்கள் மற்றும் முதியவர்களை வீட்டிற்குள் பாதுகாப்பாக வைத்திருக்கவும்.

மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கைகளைப் பின்பற்றி, பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Previous Post

24 ஆவது வாரமாகவும் தொடரும் பலாலி மக்களின் காணி மீட்புப் போராட்டம்

Next Post

பாகிஸ்தான் ஏ அணியை வீழ்த்தி சம்பியனாவதற்கு இலங்கை ஏ அணி கங்கணம்

Next Post
பாகிஸ்தான் ஏ அணியை வீழ்த்தி சம்பியனாவதற்கு இலங்கை ஏ அணி கங்கணம்

பாகிஸ்தான் ஏ அணியை வீழ்த்தி சம்பியனாவதற்கு இலங்கை ஏ அணி கங்கணம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

புலிகளுக்கு எதிரான போர் போன்று இனி உலகில் நடப்பதற்கு வாய்ப்பில்லை!

தமிழ் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க முடியாது: கோத்தபாய ராஜபக்ஸ.

விளையாட்டு வினையான சம்பவம்: 4 வயது தம்பியை தவறுதலாக சுட்டுக்கொன்ற சகோதரன்.

பாகிஸ்தான் ஏ அணியை வீழ்த்தி சம்பியனாவதற்கு இலங்கை ஏ அணி கங்கணம்

பாகிஸ்தான் ஏ அணியை வீழ்த்தி சம்பியனாவதற்கு இலங்கை ஏ அணி கங்கணம்

November 29, 2026
கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

11 மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

November 29, 2026
24 ஆவது வாரமாகவும் தொடரும் பலாலி மக்களின் காணி மீட்புப் போராட்டம்

24 ஆவது வாரமாகவும் தொடரும் பலாலி மக்களின் காணி மீட்புப் போராட்டம்

November 29, 2026
பாடசாலை நேரத்தை நீடிக்கும் தீர்மானத்தை அரசு நீக்காவிட்டால் பணிப்பகிஷ்கரிப்பு | இலங்கை ஆசிரியர் சங்கம்

நாளை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைநிறுத்தம்

November 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures