ஒரு தொகை தங்கத்தை சட்டவிரோதமாக இந்தியாவிற்கு கடத்திச் செல்ல முற்பட்ட நான்கு நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியர் ஒருவரும் மூன்று இலங்கையர்களுமே இவ்வாறு இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 20, 23, 24 மற்றும் 38 வயதுடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
387.81 கிராம் நிறையுடைய தங்கம் இதன்போது சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி 2,132,955 ருபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
கடத்த முற்பட்ட தங்கங்கட்டிகள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களில் ஒருவருக்கு 10,000 ரூபா படி அபராதம் விதிக்கப்பட்டதாக சுங்கப் பிரிவு கூறியுள்ளது.
