இன்று காலை ஹட்டன் – எபோட்சிலி தோட்டம், புளோரண்ஸ் பிரிவில் பழைய மாட்டுத்தொழுவம் ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இராமசாமி இராமஜெயம் (வயது 65 ) என்ற குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாட்டுத் தொழுவம் உள்ள பகுதிக்குச் சென்றவர்கள் அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதை அறிந்து தொழுவத்தைத் திறந்து பார்க்கையிலேயே அந்த நபர் சடலமாகக் கிடந்துள்ளார்.
இதனையடுத்து ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதுடன், அந்த இடத்திலிருந்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுகொண்டுவருகின்றனர்













