Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

இதயத்தில் குத்திய ஆணியுடன் காரை ஓட்டி மருத்துவமனை சென்ற நபர்..!!

August 21, 2017
in World
0
இதயத்தில் குத்திய ஆணியுடன் காரை ஓட்டி மருத்துவமனை சென்ற நபர்..!!

அமெரிக்காவில் இதயத்தில் குத்திய ஆணியை அகற்றாமல் சுமார் 20 கிலோ மீற்றர் தூரம் காரை ஓட்டிச் சென்று நபர் ஒருவர் மருத்துவமனையில் சேர்ந்து தன்னைத்தானே காப்பாற்றிக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தைச் சேர்ந்தவர் 52 வயதாகும் டாக் பெர்க்சன். இவர் தனது வீட்டில் மரவேலைகள் செய்து கொண்டிருந்த போது, தவறுதலாக ஆணி அடிக்கும் எந்திரத்திலிருந்து, ஒரு ஆணி இவரின் மார்பில் பாய்ந்துள்ளது.

ஆணி மிக ஆழமாகச் சென்று இதயத்தில் பாய்ந்திருப்பதை உணர்ந்த அவர், அந்த ஆணியைப் பிடுங்காமல் தனது காரை 20 கிலோ மீற்றர் ஓட்டிச் சென்று மருத்துவமனையை அடைந்துள்ளார். அதன் பிறகே தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் அவரை உடனடியாக அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து, அறுவை சிகிச்சை மூலம் ஆணியை எடுத்து, காயத்தையும் சரி செய்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறும் போது, இதயத்தின் முக்கியமான பகுதிக்கு மிக அருகில் ஆணி குத்தி இருந்தது. இன்னும் சற்று ஆழமாக குத்தி இருந்தால், அவரின் உயிரை காப்பாற்றி இருக்க முடியாது. டாக் தனது புத்திசாலித்தனம் மற்றும் சமயோசிதத்தால் தனது உயிரை தானே காப்பாற்றியுள்ளார் என்று கூறினர்.

மறைந்த பிரபல டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சி தொகுப்பாளரும், உயிரியல் வல்லுநருமான ஸ்டீவ் இர்வின், கடல் உயிரினங்கள் ஆய்வின் போது திருக்கை மீன் தனது வாலில் உள்ள கூரான எலும்பால் அவரது மார்பில் தாக்கியது.

அது அவரது இதயத்தில் குத்தியது. மருத்துவர்கள் உதவி இன்றி அவரே அதை பிடுங்கியதால் மரணமடைந்தார். ஆனால் டாக் பெர்க்சன், புத்திசாலித்தனமாக மருத்துவமனைக்குச் சென்று தன்னைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார்.

Previous Post

தங்கம் கடத்த முற்பட்டவர்கள் கைது

Next Post

6 லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு வெடிக்கவுள்ள சூப்பர் எரிமலை!

Next Post
6 லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு வெடிக்கவுள்ள சூப்பர் எரிமலை!

6 லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு வெடிக்கவுள்ள சூப்பர் எரிமலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026
ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

ஜூலையில் வெளியாகிறது நடிகர் பாரி இளவழகனின் ‘அன்பே டயானா’

June 19, 2026
செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

செம்மணி புதைகுழி விவகாரம்: நீதி அமைச்சர் குழுவின் கவனத்தை ஈர்க்க கவனயீர்ப்பு போராட்டம்

June 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures