மனிதனின் பாக்கெட்டிற்குள் வெடித்த மின்- சிகரெட் பற்றறி.
கல்கரி மனிதனொருவர் வெள்ளிக்கிழமை இரவு மனைவியுடன் அவர்களின் பிரியமான உணவகத்தின் முன்னால் நின்ற போது அவரது காற்சட்டை பாக்கெட்டிற்குள் இருந்த இ-சிகரெட் பற்றறி வெடித்ததால் தீப்பொறியையும் அதிக வெப்பத்தையும் உணர்ந்துள்ளார்.
இந்த வியத்தகு வெடிப்பை பாதுகாப்பு வீடியோ ஒன்று பதிவு செய்துள்ளது.
வெடிப்பினால் ஏற்பட்ட வெப்பம் மிகவும் ஆழந்திருந்த காரணத்தால் ரெறென்ஸ் ஜோன்சன் என்ற குறிப்பிட்ட மனிதருக்கு ஏற்பட்ட மூன்றாம்-நிலை தீப்புண்களை குணப்படுத்த தோல் ஒட்டு சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
கைகளிலும் முதல் மற்றும் இரண்டாம்-நிலை தீக்காயங்கள் ஏற்பட்டது. காற்சட்டை பாக்கெட்டிற்குள் ஏற்பட்ட தீயை அணைக்க பரபரப்புடன் தட்டிக்கொள்ள கைகளால் தடவியதால் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது.
திடீரென எல்லா இடங்களிலும் தீப்பிழம்புகள் பரவத்தொடங்கின. பெட்ரோல் நிரம்பிய புட்டியை யாரோ தங்கள் மீது வீசியதாக தான் நினைத்ததாக இவரது மனைவி றேச்சல் றெக்ஸ் தெரிவித்தார். இவர் பொலியெஸ்டர் உள்ளங்கியை அணிந்திருந்த காரணத்தாலும் காற்சட்டை பாக்கெட்டிற்குள் சில்லறை காசுகளை வைத்திருந்ததாலும் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டதாக அறியப்படுகின்றது. பொலியெஸ்டர் வெப்பத்தினால் உருகிவிட்டது. இதனால் தோல் காலின் கீழ்வரை சிந்திவிட்டதென கூறப்படுகின்றது.
தொழில் தகைமை மிக்க பிளம்பரும் எரிவாயு ஒட்டுநருமான இவர் குணமடைந்து வருவதாகவும் காயங்கள் காரணமாக பணிக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கின்றார்.
ஜோன்சன் மருத்துவ விடுமுறையில் இருப்பதால் குடும்பத்தினருக்கு உதவும் பொருட்டு ஒரு GoFundMe பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
3,365 total views, 436 views today
– See more at: http://www.canadamirror.com/canada/81851.html#sthash.rG1DDzoI.dpuf