Easy 24 News

உலகப்புகழ் பெற்ற கனடிய சிகையலங்கார நிபுணர் கொலை!

உலகப்புகழ் பெற்ற கனடிய சிகையலங்கார நிபுணர் கொலை!

சர்வதேசரீதியாக அறியப்பட்ட ரொறொன்ரோவை சேர்ந்த சிகையலங்கார நிபுணரும் அழகுநிறுவன அதிகாரியுமான வாபியோ செமென்ரிலி அவரது லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில் குத்தப்பட்டும், தாக்கப்பட்டும் கிடந்து கண்டுபிடிக்க பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கொலைக்கான உள்நோக்கம் குறித்த விபரத்தை துப்பறிவாளர்கள் உடனடியாக வெளியிடவில்லை. இவரது கறுப்பு நிற 2008 பொஷெ 911 கரெரா வாகனமும் வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
49-வயதுடைய Sementilli, Woodland Hills உயர் மட்ட குடியிருப்பு பகுதியில் உள்ள இவரது வீட்டின் உள் முற்றத்தில் இரத்தம் வெளியேறிக்கொண்டிருந்த நிலையில் அவசர மருத்துவ சேவைப்பிரிவினர் கண்டதாகவும் அந்த இடத்திலேயே இறந்து விட்டதாகவும் கூறப்படுகின்றது.
கனடாவில் பிறந்த Sementilli சிறந்த ஒரு முன்னணி முடி ஒப்பனையாளராகவும் மாபெரும் அழகு சாதன பொருட்கள் கல்வி நிறுவனமான Coty Inc. அதிபராகவும் பணிபுரிந்தார்.
தொழிலில் ஒரு சின்னமாக விளங்கினார் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

hai2hai1

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *