Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நிலைமாறுதல் கட்டத்தில் உள்ள இலங்கையை ரி20 தொடரில் பரீட்சார்த்த நிலை பாகிஸ்தான் இன்று சந்திக்கிறது

October 9, 2026
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நிலைமாறுதல் கட்டத்தில் உள்ள இலங்கையை ரி20 தொடரில் பரீட்சார்த்த நிலை பாகிஸ்தான் இன்று சந்திக்கிறது

நிலைமாறுதல் கட்டத்தில் இருக்கும் இலங்கை மற்றும் பரீட்சார்த்த நிலையில் உள்ள பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பு சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று இரவு மின்னொளியில் நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகிறது.

அண்மைக்காலமாக சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் திருப்திகரமான பெறுபேறுகளைக் கொண்டிராத இலங்கை, அண்மைக் காலமாக தாங்கள் இன்னும் நிலைமாறுதல் நிலையில் இருப்பதாகவும் இன்னும் நிறைய கற்கவேண்டியுள்ளதாகவும் தெரிவித்துவருகிறது.

இதேவேளை, பாகிஸ்தான் பல இளம் வீரர்களை பரீட்சித்துப் பார்க்கும் நோக்கத்துடன் இன்றைய போட்டியை எதிர்கொள்கிறது.

ஏழு வருடங்களுக்கு முன்னர் லாகூரில் நடைபெற்ற இருதரப்பு சர்வதேச ரி20 தொடரில் பாகிஸ்தானை 3 – 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கை வெற்றிகொண்டிருந்தது.

இப்போது 7 வருடங்கள் கழித்து ராவல்பிண்டியில் பாகிஸ்தானை இருதரப்பு ரி20 தொடரில் இலங்கை சந்திக்கிறது.

2019இல் வெற்றிபெற்ற இலங்கை அணியில் இடம்பெற்ற தசுன் ஷானக்க மாத்திரமே நடப்பு தொடரில் விளையாடவுள்ளார்.

இந்தத் தொடரில் வெற்றிவாகை சூடுவதாக இருந்தால் சகலதுறைகளிலும் அதிகப்பட்ச ஆற்றல்களை வெளிப்படுத்தவேண்டிவரும்.

இந்தத் தொடரை முன்னிட்டு அணித் தலைவர் குசல் மெண்டிஸ், முன்னாள் தலைவர் தசுன் ஷானக்க, கமிந்து மெண்டிஸ், துஷ்மன்த சமீர, மஹீஷ் தீக்ஷன ஆகிய அனுபவசாலிகள் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

அதேவேளை, சகலதுறைகளில் பிரகாசித்து வரும் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணித் தலைவர் துனித் வெல்லாலகே, மற்றொரு முன்னாள் கனிஷ்ட அணித் தலைவர் சினேத் ஜயவர்தன, இளம் சுழல்பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோரும் குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற முதல் தர கழகங்களுக்கு இடையிலான ரி20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் தமிழ் யூனியன் சம்பியனாவதில் முக்கிய பங்காற்றிய ஆரம்ப வீரர் சினேத் ஜயவர்தன, சுழல்பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகிய இருவரும் இன்றைய போட்டியில் முதல் பதினொருவர் அணியில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தொடரில் இலங்கையின் முதல்; நிலை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் விளையாடாத நிலையில் இளம் வீரர்கள் தங்களது ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கான அரிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

வழமையான ஆரம்ப வீரர்களில் ஒருவராக அணித் குசல் மெண்டிஸ் அணியில் இடம்பெறுவதுடன் சினேத் ஜயவர்தன, காமில் மிஷார அல்லது லிஹிரு உதார ஆகிய மூவரில் ஒருவர் அவருடன் ஜோடி சேர வாய்ப்புள்ளது. மற்றைய இருவரில் ஒருவர் மூன்றாம் இலக்கத்தில் விளையாடுவார்.

இதேவேளை மத்திய வரிசையை சகலதுறை வீரர்களான கமிந்து மெண்டிஸ், சஹான் ஆராச்சிகே, தசுன் ஷானக்க ஆகியோர் பலப்படுத்துவர்.

மற்றொரு சகலதுறை வீரரான துனித் வெல்லாகே, விஜயகாந்த் வியாஸ்காந்த், மஹீஷ் திக்ஷன ஆகியோர் சுழல்பந்துவீச்சாளர்களாகவும் துஷ்மன்த சமீர, பினுர பெர்னாண்டோ அல்லது நுவன் துஷார வேகப்பந்து வீச்சாளர்களாகவும் இடம்பெற்று அணியைப் பூர்த்திசெய்வர் என கருதப்படுகிறது.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இதுவரை நடைபெற்றுள்ள 30 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் 18 – 12 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.

இது இவ்வாறிருக்க, இத் தொடரை முன்னிட்டு பாகிஸ்தான் அணியில் அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

சஹிப்ஸதா பர்ஹான் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான், பக்கார் ஸமான், சய்ம் அயுப், நசீஸ் ஷா, சுபியான் முக்கீம், அப்ரார் அஹ்மத், நசீம் ஷா போன்ற சிறந்த வீரர்கள் இடம்பெறுகின்றனர்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி அக்டோபர் 11ஆம் திகதியும் கடைசிப் போட்டி 13ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.

Previous Post

தமிழகத்தின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தமிழக வெற்றி கழகம் வெற்றி

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நிலைமாறுதல் கட்டத்தில் உள்ள இலங்கையை ரி20 தொடரில் பரீட்சார்த்த நிலை பாகிஸ்தான் இன்று சந்திக்கிறது

நிலைமாறுதல் கட்டத்தில் உள்ள இலங்கையை ரி20 தொடரில் பரீட்சார்த்த நிலை பாகிஸ்தான் இன்று சந்திக்கிறது

October 9, 2026
மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்? – எதிர்க்கட்சிகளுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கேள்வி

தமிழகத்தின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தமிழக வெற்றி கழகம் வெற்றி

October 9, 2026
அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம்பிள்ளைக்கு!

அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம்பிள்ளைக்கு!

October 9, 2026
ஊழலுக்குக் காட்டும் அக்கறையை காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் அரசு காட்டுவதில்லை – அ.அமலநாயகி 

ஊழலுக்குக் காட்டும் அக்கறையை காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் அரசு காட்டுவதில்லை – அ.அமலநாயகி 

October 9, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures