Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஊழலுக்குக் காட்டும் அக்கறையை காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் அரசு காட்டுவதில்லை – அ.அமலநாயகி 

October 9, 2026
in Cinema, News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஊழலுக்குக் காட்டும் அக்கறையை காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் அரசு காட்டுவதில்லை – அ.அமலநாயகி 

ஊழல், இலஞ்சங்கள் விடயங்களுக்காக எடுக்கிற கரிசனையை இந்த அரசாங்கம் இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி, அவர்களுக்கு என்ன நடந்தது என்றொரு பொறுப்புக்கூறல் மற்றும் எந்தவொரு நகர்வும் இதுவரை நகர்த்தப்படவில்லை என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி குற்றஞ்சாட்டியுள்ளார்.

எங்களுக்கு பிஎஸ்ரியும் வேண்டாம், பிரிஏயும் வேண்டாம் என்றொரு கோரிக்கையை இன்றைய தினத்தில் வடக்கு – கிழக்கு இணைந்த தமிழ் மக்கள் சார்பாக, பாதிக்கப்பட்ட ஒரு சமூகமாக, அனைத்து பொதுமக்கள் சார்பாக விடுக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராகவும், மக்களின் ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (9) மட்டக்களப்பு நகரில் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் இடம்பெற்ற இப்போராட்டமானது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 8 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக அடிப்படை அமைப்புகள், காணாமலாக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கூட்டு ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் பொறிக்கப்பட்ட பேரணிப் பதாகைகள் மற்றும் விழிப்புணர்வு அட்டைகளை ஏந்தியவாறு கண்டனக் கோஷங்களை எழுப்பினர். 

குறிப்பாக ‘பிஎஸ்ரிஏ’ சட்டமூலம் வேண்டாம்…!” என்ற பிரதான பதாகையுடன் திரண்ட அவர்கள், “நாங்கள் கேட்டது மாற்றம்; ஆனால் கிடைத்தது ஏமாற்றம்!” என்ற வாசகம் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.  மேலும், “அடக்குமுறைச் சட்டங்கள் எதுவும் வேண்டாம்!”, “சட்டம் பாதுகாக்க வேண்டும்; மாறாக பயமுறுத்தக் கூடாது!” மற்றும் “கேட்பது ஜனநாயகம்; தருவது அடக்குமுறை” போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ள இத்தகைய அடக்குமுறைச் சட்டமூலங்களை அரசு உடனடியாகக் கைவிட்டு, ஜனநாயகத்தையும் மக்களின் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமலநாயகி,

போரினால் பாதிக்கப்பட்டு, காணாமலாக்கப்பட்டு, யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களாக இன்றைக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக காந்தி பூங்காவிலே இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை செய்கின்றோம்.   கடந்த காலங்களில் எமது உறவுகள் காணாமலாக்கப்பட்டதும், ஓர் இன அழிப்பு செய்யப்பட்டதும் இந்த PTA சட்டத்தின் ஊடாகத்தான். இன்று வரை எங்களுடைய உறவுகளைத் தேடுபவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.

இந்தச் சட்டங்களை வைத்துக்கொண்டு கடந்த கால அரசு செய்த குற்றங்கள், கடத்தல்கள், கொலைகள் போன்றவை கடந்த கால அரசுகளால் பயங்கரவாத தடைச் சட்டத்தினால்தான் இடம்பெற்றன. 17 வருடங்கள் கழிந்தும், ஏன் 30, 35 வருடங்கள் கழிந்தும் இந்தச் சட்டங்களை வைத்துக்கொண்டு அரசு ஒவ்வொரு குடும்பங்களையும் அவல நிலைக்கு இந்த அரசாங்கங்கள் கொண்டுவந்தன.  

ஆனால் இப்போது புதிதாக பிஎஸ்ரிஏ என்ற ஒரு சட்டத்தையும் கொண்டுவந்து எங்களுடைய உறவுகளைத் தேடும் உரிமையைக் கூட மழுங்கடிக்கிற நிலைமையாகத்தான் இந்த அரசு இன்னும் மிக மோசமான எங்களுடைய உறவுகளைக் கேட்கக் கூட இயலாத ஒரு பிஎஸ்ரிஏ சட்டத்தைக் கொண்டுவந்து எங்களை அந்த குரல்வளைகளை நெறித்து, எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதைக் கூட கேட்க இயலாத ஒரு சட்ட நடைமுறையைத்தான் கொண்டுவருகிறார்கள்.  

ஆகவே, நாங்கள் கடந்த காலங்களில் பல போராட்டங்களை நடத்தியிருந்தோம். பல இடங்களில் பதிவு செய்திருந்தோம், எங்களுக்கு பிரிஏயும் வேண்டாம், பிஎஸ்ரிஏயும் வேண்டாம் என்று. 

அதேபோன்றுதான் இதுவரை எங்களுடைய உறவுகளைத் தேடும் உரிமை இந்த நாட்டுக்குள் இல்லை. அதை இன்னும் ஒரு முறை சர்வதேச நாடுகளுக்கு எடுத்துரைக்கும் முகமாக இந்த அரசு பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் என்று சொல்லிக்கொண்டு மக்களை ஒடுக்கி, தங்களுடைய குரல்வளைகளை நெரித்து, தங்களுடைய உரிமைகளைக் கேட்கவிடாது தங்களுடைய நிலங்களை, தங்களுடைய உறவுகளை, தங்களுடைய உரிமைகளை, தங்களுடைய பேச்சுச் சுதந்திரத்தைக் கூட நடத்த முடியாதவாறு இந்த பிஎஸ்ரிஏ சட்டத்தைக் கொண்டுவந்து மக்களை ஒடுக்குவதாக காணப்படுகிறது. தமிழர்களாகிய நாங்கள், பாதிக்கப்பட்ட தரப்பாக இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.  

ஆகவே, இந்த அரசு உடனடியாக ஊழல், லஞ்சங்கள் அந்தந்த விடயங்களுக்காகப் எடுக்கிற கரிசனையை, அரசாங்கம் வந்தும், இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி, அவர்களுக்கு என்ன நடந்தது என்றொரு பொறுப்புக்கூறல், எந்தவொரு நகர்வும் இதுவரை நகர்த்தப்படவில்லை. ஆகவே, இந்த அரசிலும் நாங்கள் நம்பிக்கை இழந்துதான் சர்வதேச விசாரணை வேண்டும், சர்வதேசத்தின் ஊடாக எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறியவேண்டும் என்ற நோக்கோடு நாங்கள் பயணித்துக்கொண்டிருக்கிறோம். 

அதைத் தடை செய்வதற்காகத்தான் இந்த அரசு PSTA சட்டத்தைக் கொண்டுவருகின்றது  என்றொரு சந்தேகம் எங்களுக்குள் எழுகிறது. எமது உறவுகளுடைய நிலையையும் கண்டறிவதற்கான எங்களுக்கான ஒரு சுதந்திரத்தைத் தரவேண்டும். ஆகவே, பாதிக்கப்பட்ட மக்களாக நாங்கள் இந்த இடத்திலே கூற விரும்புவது எங்களுக்கு பிஎஸ்ரி யும் வேண்டாம், பிரிஏயும் வேண்டாம் என்ற ஒரு ஒரு கோரிக்கையை இன்றைய நாள் வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ் மக்கள் சார்பாக, இந்த இடத்திலே பாதிக்கப்பட்ட ஒரு சமூகமாக, அனைத்து பொதுமக்கள் சார்பாக இந்தக் கோரிக்கையை விடுக்கிறோம் என்று குறிப்பிட்டார். 

Previous Post

ஷிரந்தியை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்ற மகிந்த

Next Post

அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம்பிள்ளைக்கு!

Next Post
அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம்பிள்ளைக்கு!

அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம்பிள்ளைக்கு!

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நிலைமாறுதல் கட்டத்தில் உள்ள இலங்கையை ரி20 தொடரில் பரீட்சார்த்த நிலை பாகிஸ்தான் இன்று சந்திக்கிறது

நிலைமாறுதல் கட்டத்தில் உள்ள இலங்கையை ரி20 தொடரில் பரீட்சார்த்த நிலை பாகிஸ்தான் இன்று சந்திக்கிறது

October 9, 2026
மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்? – எதிர்க்கட்சிகளுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கேள்வி

தமிழகத்தின் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தமிழக வெற்றி கழகம் வெற்றி

October 9, 2026
அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம்பிள்ளைக்கு!

அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம்பிள்ளைக்கு!

October 9, 2026
ஊழலுக்குக் காட்டும் அக்கறையை காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் அரசு காட்டுவதில்லை – அ.அமலநாயகி 

ஊழலுக்குக் காட்டும் அக்கறையை காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் அரசு காட்டுவதில்லை – அ.அமலநாயகி 

October 9, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures