Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பனைவளம் எமது அடையாளம், வாழ்வாதாரம் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

May 8, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பனைவளம் எமது அடையாளம், வாழ்வாதாரம் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

பனை மரம் வெறும் தாவரம் மட்டுமல்ல. அது எமது தமிழ் சமூகத்தின் அடையாளமும் வாழ்வாதாரமும் ஆகும். கற்பகத்தரு என்று போற்றப்படும் இந்தப் பனை மரத்தின் ஒவ்வொரு பாகமும் மனிதனுக்கு பயன் தரக்கூடியது. எமது முன்னோர்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்திருந்த பனை வளம் இன்றைய நவீன உலகில் மீண்டும் ஒரு எழுச்சியை பெற்று வருவது வரவேற்கத்தக்கது என பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

கொழும்பு தமிழ்ச் சங்கம் மற்றும் பனை அபிவிருத்தி சபை இணைந்து ஏற்பாடு செய்துள்ள “தமிழர் பண்பாடும் பனைவளமும் 2026” கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வை  பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று (08) வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்த போதே இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 

பொருளாதார மேம்பாடு பனை சார் உற்பத்திகள் உலக அளவில் கவனம் பெற்று வருவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், பனை வெல்லம், கருப்பட்டி, பனை நாரினால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் போன்றவை இயற்கை சார்ந்த வாழ்வியலுக்கு ஒரு சிறந்த மாற்றாக அமைந்துள்ளன. எமது அமைச்சின் ஊடாகவும் பனை அபிவிருத்திச் சபையின் ஊடாகவும் பனை சார் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கும் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்றார்.

உற்பத்தியாளர்களுக்கு பாராட்டு நிகழ்வில் சான்றிதழ் பெற்ற பனை சார் உற்பத்தியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதி அமைச்சர், “உங்களின் உழைப்பும் கலைத்திறனுமே எமது பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்கிறது” எனப் பாராட்டினார்.

இக்கண்காட்சியை ஏற்பாடு செய்த கொழும்பு தமிழ்ச் சங்கத்திற்கும் பனை அபிவிருத்திச் சபைக்கும் நன்றி தெரிவித்த அவர், கண்காட்சிக்கு வருகை தரும் மக்கள் எமது பாரம்பரிய பொருட்களை ஆதரிப்பதன் மூலம் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இக்கண்காட்சி மற்றும் விற்பனையானது இன்று (08) வெள்ளிக்கிழமையும் நாளை (09) சனிக்கிழமையும் காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை வெள்ளவத்தை தமிழ்ச்சங்க  சங்கரப்பிள்ளை மண்டபத்தில்  நடைபெற உள்ளது.

இந் நிகழ்வில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இளங்குமரன், வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா , மட்டு  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு , கொழும்பு மாவட்ட அமைப்பாளர் சிவானந்த ராஜா, பனை அபிவிருத்தி சபையின் தலைவர் ஆர் இரவீந்திரன், ஸ்ரீ விஜேந்திரன் , காண்டீபன்  கொழும்பு மாநகர சபை உறுப்பினர் திருச்செல்வம், தமிழ் சங்கத்தின் செயலாளர், வர்த்தகர்கள் பொதுமக்கள் அமைச்சின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Previous Post

தீபச்செல்வனின் புத்தகங்கள் தடுப்பு | பாராளுமன்றத்தில் பிரதமர் மற்றும் நீதியமைச்சரிடம் கேள்வி எழுப்பிய கஜேந்திரகுமார்

Next Post

கொழும்பு அணியை 119 ஓட்டங்களால் வெற்றிகொண்டு தேசிய சுப்பர் லீக் சம்பியனானது தம்புள்ளை

Next Post
கொழும்பு அணியை 119 ஓட்டங்களால் வெற்றிகொண்டு தேசிய சுப்பர் லீக் சம்பியனானது தம்புள்ளை

கொழும்பு அணியை 119 ஓட்டங்களால் வெற்றிகொண்டு தேசிய சுப்பர் லீக் சம்பியனானது தம்புள்ளை

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் 50ஆவது நாள் வெற்றி விழா

விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் 50ஆவது நாள் வெற்றி விழா

September 5, 2026
புளூ ஈக்ள்ஸ் கழகத்திடம் றினோன் கழகம் அதிர்ச்சித் தோல்வி

புளூ ஈக்ள்ஸ் கழகத்திடம் றினோன் கழகம் அதிர்ச்சித் தோல்வி

September 5, 2026
நாமல் ராஜபக்‌ஷவின் உயிருக்கு அச்சுறுத்தல் | குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

நாமல் ராஜபக்‌ஷவின் உயிருக்கு அச்சுறுத்தல் | குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

September 5, 2026
சிறைக் கைதியை கொலை செய்ய நாமல் திட்டமாம்.! சிஐடிக்கு விரைந்த மொட்டுக் கட்சி

நாமலின் கைது புதிய விடயமல்ல | நாமலைச் சந்தித்த பின் மஹிந்த கருத்து!

September 5, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures