Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மக்கள் விரும்பினால் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவர முடியும் | ராஜித

November 1, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அநுரவின் அதிரடி அரசியல் ஆட்டம் : கைது செய்யப்படுவாரா ரணில்?

பாராளுமன்றத்தில் எமக்கு அதிகாரத்தை வழங்கினால் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை ஜனவரியில் வழங்குவோம். மக்கள் விரும்பினால் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவர முடியும் என புதிய ஜனநாயக முன்னணியின் களுதுறை மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் வழிநடத்தல் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் அரச ஊழியர்களின்  அடிப்படைச்சம்பளம் ஜனவரியில் நூற்றுக்கு 24 வீதமாக அதிகரிக்கிறது.

இதன் மூலம் புதிதாக அரச சேவையில் இணைந்துகொள்பவருக்கு அவரின் அடிப்படைச் சம்பளம் 55ஆயிரமாக அமையும். அதேபோன்று வாழ்க்கைச்செலவு கொடுப்பனவு 25ஆயிரமாக அதிகரிக்கப்படும். அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கும் போது மேலதிக நேர கொடுப்பனவு உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்படுகின்றன.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தேர்தலை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டதல்ல. நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது  வருடாந்தம் மேற்கொள்ளப்படும் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு இடம்பெறவில்லை. 

அதனால் அவர்களுக்கான சம்பள அதிகரிப்பை முறையாக மேற்கொள்ள உதய செனவிரத்ன குழுவை நியமித்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. 

அந்த குழுவின் பரிந்துரைக்கமையவே ஜனவரி முதல் இரணடு கட்டங்களாக சம்பள அதிகரிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளுக்கு அமைச்சரவையின் அனுமதியும் பெறப்பட்டது.

தற்போதைய பிரதமருக்கு அரசியல் அனுபவம் இல்லை. அரச சேவையில் இருந்தவர் அல்ல. அவர் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டவர். 

அதனால் அவருக்கு அரச சேவை தொடர்பில் தெரியாது. அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட உதய செனவிரத்ன குழுவில் இருந்தவர்கள் யார் எனவும் தெரியாமல் பிரதமர் கதைக்கிறார். இதன் மூலம் அரச சேவை தொடர்பில் அவரின் புரிதலை விளங்கிக்கொள்ளலாம்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றினார். மீனவர்களுக்கான உரிபொருள் மற்றும் விவசாயிகளுக்கான உர நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.  

தேர்தல் காரணமாக அதனை  வழங்குவதை தேர்தல் ஆணைக்குழு நிறுத்தி இருந்தது.  அநுரகுமார திஸாநாயக்க அதனையே தற்போது வழங்கி இருக்கிறார். 

மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானத்தை அவ்வாறே நிறைவேற்ற முடியும் என்றால், ஏன் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது என கேட்கிறோம்.

அரச ஊழியர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அடித்த புள்ளடி மூலம் 55ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை இழந்துள்ளனர்.

அதனால் பாராளுமன்ற தேர்தலில் அரசாங்கத்தை அமைப்பதற்கு மக்கள் ஆணை வழங்கினால் ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்குவோம். 

அதேபோன்று வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பிய ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து நாட்டை  கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்போம். மக்கள் விரும்பினால் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவர முடியும் என்றார்.

Previous Post

அரச ஊழியர்கள் சம்பளத்தை உயர்த்த மறுக்கும் அரசு …! கடுமையாக சாடும் முன்னாள் எம்.பி.

Next Post

ஊடக சுதந்திரம் குறித்து பேசிய ஜனாதிபதி இன்று ஊடகங்களுக்கு அழுத்தங்களை கொடுக்க ஆரம்பித்துள்ளார் – சஜித் பிரேமதாச

Next Post
விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

ஊடக சுதந்திரம் குறித்து பேசிய ஜனாதிபதி இன்று ஊடகங்களுக்கு அழுத்தங்களை கொடுக்க ஆரம்பித்துள்ளார் - சஜித் பிரேமதாச

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026

Recent News

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

சோமரத்ன ராஜபக்‌சவிடம் பன்னாட்டு விசாரணை! நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

June 24, 2026
பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

நடிகர் ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மாற்றல்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

June 24, 2026
அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures