Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரச ஊழியர்கள் சம்பளத்தை உயர்த்த மறுக்கும் அரசு …! கடுமையாக சாடும் முன்னாள் எம்.பி.

November 1, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

அரச ஊழியர்களின் சம்பளத்தை அநுர அரசு உயர்த்த மறுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) குற்றஞ்சாட்டியுள்ளார்

அத்துடன், அநுர அரசாங்கமும் சிங்கள தேசிய வாதத்தையே பின்தொடர்வதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று (31) வவுனியாவில் (Vavuniya) அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்களின் கோபம் 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”இந்த தேர்தலில் தமிழ் கட்சிகளாகிய நாம் அனைவரும் ஒரு பொதுச்சின்னத்தின் கீழே போட்டியிடுவோம் என்று முயற்சிகளை எடுத்திருந்தோம். அது சாத்தியப்படவில்லை. எனவே அது மனவேதனையை அழிக்கிறது.

அரச ஊழியர்கள் சம்பளத்தை உயர்த்த மறுக்கும் அரசு ...! கடுமையாக சாடும் முன்னாள் எம்.பி. | Salary Revision Of Govt Employees In Sri Lanka

இருப்பினும் நாம் ஐந்து கட்சிகள் தற்போது ஒன்றாக இருக்கிறோம். ஏனையவர்களையும் உள்ளே கொண்டுவருவதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் செய்வோம். தேர்தலின் பின்னராவது தமிழ்கட்சிகள் இணைந்து செல்வதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்.

அத்துடன் தேர்தலின் பின்னர் ஒற்றுமையை விரும்பாதவர்கள் மீது மக்களின் கோபம் பிரதிபலித்திருக்கும். அவ்வாறு மக்கள் பாடம் புகட்டும் போது ஒற்றுமையினை ஏற்ப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படலாம்.

எனவே மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயற்ப்படுபவர்களை அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 

கடந்த அரசாங்கத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அரசாங்கமும் புதிய ஜனாதிபதியும் அது தொடர்பான கருத்துக்களை கூற மறுக்கின்றனர்.

அரச ஊழியர்கள் சம்பளத்தை உயர்த்த மறுக்கும் அரசு ...! கடுமையாக சாடும் முன்னாள் எம்.பி. | Salary Revision Of Govt Employees In Sri Lanka

எனவே அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்படவுள்ளதாக சொல்லப்பட்ட ஊதியம் கூட்டப்பட வேண்டும். எமது கட்சி இதற்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கும்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஆசனங்களை கூடுதலாக எடுக்கவேண்டும் என்பதை நோக்கமாக கொண்டே ஊழல் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என அரசால் காட்டப்பட்டுகிறது.

அத்துடன் மாகாணசபை முறைமையை ஒழிக்க வேண்டும் என்பது இந்த அரசாங்கத்தின் குரலாக உள்ளது. குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர்கள் இவர்களே.

திடமான அரசாங்கம்

ஆனால் அதனை நீக்குவதற்கான சூழலில் அவர்கள் இருப்பதுபோல தெரியவில்லை. இடதுசாரித்துவத்தினை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி இன்று சிங்கள தேசிய வாதத்தோடு இணைந்து செயற்படுகின்றது.

அரச ஊழியர்கள் சம்பளத்தை உயர்த்த மறுக்கும் அரசு ...! கடுமையாக சாடும் முன்னாள் எம்.பி. | Salary Revision Of Govt Employees In Sri Lanka

அந்தவகையில் திடமான ஒரு அரசாங்கம் அமைவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே இருக்கும். எனவே நாம் 11 ஆசனங்களை பெறும் போது அதிகாரம் மிக்கவர்களாக இருப்போம்.

இம்முறை தமிழ்த்தரப்பை புறந்தள்ளி புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது. அதனை நிர்ணயிக்கின்ற சக்தியாக தமிழ்த்தரப்பு இருக்கும்” என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

Previous Post

புதிய அரசும் சிங்கள தேசியவாதத்தையே பேசுகிறது | செல்வம் 

Next Post

மக்கள் விரும்பினால் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவர முடியும் | ராஜித

Next Post
அநுரவின் அதிரடி அரசியல் ஆட்டம் : கைது செய்யப்படுவாரா ரணில்?

மக்கள் விரும்பினால் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டுவர முடியும் | ராஜித

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

அயர்லாந்துடனான மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை களத்தடுப்பை தெரிவுசெய்தது

June 23, 2026
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

அரச பாடசாலைகளில் முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான புதிய சுற்றுநிருபத்துக்கு அமைச்சரவை அனுமதி

June 23, 2026
இலங்கையில் காணிப்பிரச்சினை தீர்க்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சி  –  செயலாளர் முரளிதரன்

இலங்கையில் காணிப்பிரச்சினை தீர்க்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சி – செயலாளர் முரளிதரன்

June 23, 2026
நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருளை நிராகரித்த அரச தரப்பு எம்.பிக்கள்!

நிகழ்நிலை காப்புச் சட்டம் இரத்துச் செய்யும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

June 23, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures