Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தலங்கம, அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு | மூவர் கைது

September 3, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

தலங்கம மற்றும் அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொழும்பு, மாளிகாவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். பத்தரமுல்லை, தலங்கம கொரம்பே பிரதேசத்தில் கடந்த 25ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 44 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.

உயிரிழந்தவர் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாளக்குழுக்களின் தலைவர் – தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பத்தரமுல்லை பண்டி என்பவரின் உறவினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருக்கும் பாதாள குழுக்களின் செயற்பாட்டாளரான கட்டா என்பவரால் திட்டமிட்டு இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கட்டாவின் பாதாளக் குழுக்களின் தரப்பினருக்கும், பண்டியின் பாதாளக் குழுக்களின் தரப்பினருக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகள் காரணமாக இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பிரதான துப்பாக்கிதாரி கட்டாவின் பிரதான செயற்பாட்டாளர் என்பதுடன் கட்டா மெசன்ஜர் மூலம் இந்த துப்பாக்கி பிரயோகத்தை திட்டமிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சுக்கு முன்பாக உள்ள முச்சக்கரவண்டி திருத்தும் நிலையம் ஒன்றுக்குள் இருந்தவர் மீது மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடையாளம் தெரியாத இருவரினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது பலத்த காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர் பொரளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் புதிதாக முச்சக்கரவண்டி பழுது பார்க்கும் நிலையத்தை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் வர்த்தக நிலையத்தை திறக்க வேண்டாம் என சிலரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள போதிலும் காயமடைந்த நபர் தனது சகோதரருடன் இணைந்து வர்த்தக நிலையத்தை திறந்துள்ளார். இந்த பின்னணியிலேயே  இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், குறித்த துப்பாக்கி பிரயோகத்தை அச்சுறுத்தல் விடுத்த குழுவினர் மேற்கொண்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 31ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை மறைத்து வைப்பதற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 22 வயதுடைய காலி, கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

Previous Post

13ஆவது திருத்தம், அதிகாரப்பகிர்வு விடயங்கள் காலதாமதமாகுமாம்?

Next Post

அமைச்சர் டக்ளஸ் வடமாகாண தமிழ் பேசும் பிரதிநிதிகளிடம் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை

Next Post
தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்க மீண்டுமொரு சந்தர்ப்பம் | ரணிலுக்கு டக்ளஸ் பதில் கடிதம்

அமைச்சர் டக்ளஸ் வடமாகாண தமிழ் பேசும் பிரதிநிதிகளிடம் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures