Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமைச்சர் டக்ளஸ் வடமாகாண தமிழ் பேசும் பிரதிநிதிகளிடம் விடுத்துள்ள பகிரங்க கோரிக்கை

September 4, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தமிழர்களின் அபிலாசைகளை வென்றெடுக்க மீண்டுமொரு சந்தர்ப்பம் | ரணிலுக்கு டக்ளஸ் பதில் கடிதம்

இந்திய இழுவைப்படகுகள் மற்றும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத கடற்றொழில்களால் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக வடமாகாண தமிழ் பேசும் பிரதிநிதிகள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து தரப்பினரின் கவனத்திற்கும் எடுத்துச் செல்ல வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அதேநேரம், என்னுடன் அரசியல் பேதங்களைக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் வாதிகள் அவற்றை மறந்து வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் விடயத்தில் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருந்தால் தமிழகப் பயணத்தில் நான் பங்கேற்பதற்கு தயராகவே உள்ளேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார். 

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை கண்டித்தும், அவற்றை தடுத்து நிறுத்தக்கோரியும் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால் போராட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்னால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அவ்விடயம் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

வடமாகாண கடற்றொழிலாளர்கள் இந்தியா மீனவர்களின் அத்துமீறல்கள், மற்றும் சட்டவிரோதமான இழுவைப்படகு உள்ளிட்ட மீன்பிடியால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். 

இந்த விடயம் சம்பந்தமாக நான் தொடர்ச்சியான கரிசனைகளைச் செலுத்தி வருகின்றறேன். மேலும் குறித்த விவகாரத்தினை தீராப்பிரச்சினையாக நீடித்துச் செல்வதற்கு இடமளிப்பதற்கு நான் விரும்பவுமில்லை. 

ஆகவே, உத்தியோக பூர்வமான பேச்சுவார்த்தைகள், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என்பனவற்றுக்கு அப்பால் வடமாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயத்தில் பங்கேற்பைச் செய்ய வேண்டும்.

அவர்கள் அனைவருக்கும் தமிழகத்தின் பல்வேறு அரச மற்றும் அரசியல் தரப்பினருடன் தொடர்புகள் காணப்படுகின்றன. அந்த தொடர்புகளின் ஊடாக எமது கடற்றொழிலாளர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. 

வெறுமனே, இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகின்றார்கள், இலங்கை கடற்படை தாக்குகின்றது என்ற விடயத்தினை மையப்படுத்திய பிரசாரங்களுக்கு அப்பால் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாலும், இழுவைப்படகு உள்ளிட்ட சட்டவிரோதமான மீன்பிடி முறைகளை பின்பற்றுவதாலும் ஏற்படுகின்ற இழப்புக்கள், வளப்பறிப்புக்கள் சம்பந்தமாக எடுத்துரைக்க வேண்டியுள்ளது.

அதுமட்டுமன்றி, வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் அன்றாட மற்றும் எதிர்கால நிலைமைகள் ஆபத்துக்கு உள்ளாகியிருப்பதையும் எடுத்துரைக்க வேண்டியுள்ளது.

ஆகவே, இந்த விடயத்தில் அனைத்து அரசியல் தரப்பினரும் தமிழகத்துக்கு தெளிவு படுத்தல்களை மேற்கொண்டு இப்பிரச்சினைக்கான முற்றுப்புள்ளியைப் பெறுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். 

இந்த விடயத்தில் அரசியல் பேதங்களை மறந்து செயற்படுவதற்கு நான் தயராகவே உள்ளேன். எமது கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு முழுமையானதும் நிரந்தரமானதுமான தீர்வினைப் பெறுவத்கு எனது ஒத்துழைப்புக்களை அர்ப்பணிப்புடன் வழங்க தயாராகவே உள்ளேன். 

அதற்காக, வடக்கு தமிழ் பேசும் அரசியல் வாதிகள் கூட்டாக தமிழகத்துக்கு செல்வதற்கும், அவ்வாறு செல்கின்றபோது அரசியல் பேதங்களை மறந்து என்னையும் உள்ளீர்க்க விரும்பினால் நான் பங்கேற்பதற்கு தயாராகவே உள்ளேன். 

மேலும், இந்த விடயத்தில் அனைத்து அரசியல் தரப்புக்களும் தாம் தமிழகத்துடன் கொண்டுள்ள நெருக்கமான உறவுகளை எமது கடற்றொழிலாளர்களின் எதிர்காலத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார். 

Previous Post

தலங்கம, அம்பலாங்கொடை துப்பாக்கிச்சூடு | மூவர் கைது

Next Post

இலங்கையில் நாள் ஒன்றில் 9பேர் தற்கொலை! | கடந்த வருடத்தில் 3,406 பேர் தற்கொலை!!

Next Post
வாராந்தம் 10 இற்கும் அதிகமானோரை ஈரான் தூக்கிலிடுகிறது: ஐநா

இலங்கையில் நாள் ஒன்றில் 9பேர் தற்கொலை! | கடந்த வருடத்தில் 3,406 பேர் தற்கொலை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026
வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது

June 29, 2026
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures