Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

மகளிர் உலகக் கிண்ண அணிகளின் தலைவர்கள் தினம்

February 5, 2023
in News, Sports, முக்கிய செய்திகள்
0
மகளிர் உலகக் கிண்ண அணிகளின் தலைவர்கள் தினம்

பத்து நாடுகள் பங்குபற்றும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் (50 ஓவர்) தென் ஆபிரிக்காவில் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள தென் ஆபிரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.

இதனை முன்னிட்டு பத்து நாடுகளினதும் அணிகளின் தலைவர்கள் கேப் டவுன் டேப்ள் மவுன்டனில் நடைபெற்ற தலைவர்கள் தின வைபவத்தில் கலந்து கொண்டு தத்தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, இலங்கை (குழு 1), இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் (குழு 2) ஆகிய 10 அணிகளினதும் தலைவர்கள் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.

அங்கு கருத்து வெளியிட்ட இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்து, ‘இலங்கையில் பெருமளவிலான இளம் யுவதிகள் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியுள்ளனர். ஏனெனில் அவர்கள் என்னையும் எமது அணியையும் கவனித்தவாறு இருக்கின்றனர். தாய்நாட்டிலிருந்து எமக்கு கிடைத்துவரும் ஆதரவு அளப்பரியது. இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் எமது நாட்டிற்காக விளையாடுவதையிட்டு உற்சாக மிகுதியுடன் இருக்கிறோம்’ எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்திய அணித் தலைவி ஹார்மன்ப்ரீத் கோர் கருத்து வெளியிடுகையில், ’19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கிண்ணத்தை பார்வையிட்ட பின்னர் அவர்கள் சாதித்ததை நாங்களும் சாதிக்க வேண்டும் என்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

நாங்கள் சிறப்பாக செயற்படவேண்டும் என்ற உற்சாகத்தை அவர்கள் எங்களுக்கு கொடுத்துள்ளனர். அவர்கள் உலகக் கிண்ணதை வென்றுவிட்டார்கள். நாங்கள் இன்னும் வெல்லவில்லை.

19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த பின்னர் இது எங்கள் அனைவருக்கும் ஒரு மிக முக்கிய தருணமாகும். அவர்களது வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவில் நிறைய யுவதிகள் கிரிக்கெட் விளையாட விரும்புவர். நாங்களும் அவர்களை ஊக்குவித்து, உறசாகப்படுத்துவதே எங்களது நோக்கமாகும்’ என்றார்.

ஏனைய அணிகளினது தலைவர்கள்களும் உற்சாகம் ஊட்டும் கருத்துக்களை வெளியிட்டனர்.

ஐசிசி மகளிர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி உலகம் முழுவதும் உள்ள இரசிகர்களுக்கு ஓர் அற்புதமான, விறுவிறுப்பான நிகழ்ச்சியாக அமையும் என கருதுவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் என்பன நடைபெறவுள்ளன. அத்துடன் மிக முக்கிய போட்டிகளின்போது டீஜேக்களின் இசை மழை, பரிசுகள் உட்பட பல்வேறு அம்சங்களை இரசிகர்கள் கவனிக்கக்கூடியதாக இருக்கும். இது அனைவருக்கும் மறக்க முடியாத தருணமாக அமையும்.

இரசிகர்கள் தங்களது டிக்கெட்களை www.t20worldcup.com/tickets என்ற ஒன்லைன் ஊடாகவும் போட்டி நடைபெறும் மைதானங்களில் உள்ள டிக்கெட் அலுவலகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

Previous Post

மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்டம் | கொழும்பு, பொலிஸ், ப்ளூஸ், வத்தளை, 76சர்ஸ் ஆதிக்கம்

Next Post

இயக்குநரும் நடிகருமான டி.பி. கஜேந்திரன் காலமானார்!

Next Post
இயக்குநரும் நடிகருமான டி.பி. கஜேந்திரன் காலமானார்!

இயக்குநரும் நடிகருமான டி.பி. கஜேந்திரன் காலமானார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures